side Add

கிளிநொச்சி மாவட்ட வெள்ள அழிவுகள் அடுத்த வாரம் அறிக்கை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அழிவுகள் தொடர்பில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைக்கப்பட்ட குழுக்கள் தமது அறிக்கைகளை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கன மழையின் காரணமாக அதிக வயல் நிலங்கள் , கால்நடைகள் , வாழ்வாதாரங்கள், வாழ்விடங்கள் , வீதிகள் என்பன அழிவடைந்தன.

இது தொடர்பில் நேரில் பார்வையிட்டு அழிவு விவரங்களைம் தனித் தனியாக அறிக்கையிடுமாறு பணிக்கப்பட்டது.

கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரு குழுக்கள் வீதம் நான்கு குழுக்களும், பச்சிளைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஒரு குழு வீதம் மொத்தம் ஆறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுக்கள் தமது பணியை ஆரம்பித்துள்ளன.

திரட்டப்பட்ட அழிவு விவரங்களின் அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like