குண்டுத் தாக்குதலில் – 34 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட வாகனக்குண்டுத் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

காபுல் நகரின் மையப்பகுதியில் ஜனாதிபதி மாளிகையின் அருகே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தலிபான் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

You might also like