குளவிக் கொட்டுக்கு இலக்காகி- 50 பேர் மருத்துவமனையில்!!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகளின் போது, அஙகிருந்த குளவிக் கூடு கலைந்து பலரைத் தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

You might also like