குழந்தை பிரசவித்த அரை மணி நேரத்தில் தாய் செய்த காரியம்!!

ஆண் குழந்தையைப் பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்குப் பின்னர் வைத்தியசாலையில் படுக்கையிலேயே பரீட்சையை எழுதியுள்ளார்.

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்த போது
பிரசவம் நடப்பதற்கு முன்னரே அவர் பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார்.

எனினும் ரமழான் பெருநாள் காரணமாக உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது. பரீட்சைகள் நடப்பதற்கு இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின்னர் அவர் தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.

 

You might also like