கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கு ரிசாத் முயற்சி!!

தனக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் நேற்­றுத் தொலை­பே­சி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னு­டன் பேசி­யுள்­ளார் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன். நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்க்­க­வேண்­டும் என்று அவர் கோரி­யுள்­ளார்.

“நான் இப்­போது திரு­கோ­ண­ம­லை­யில் தங்­கி­யுள்­ளேன். கொழும்பு வந்­த­தும் கூட்­ட­மைப்­பின் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் இது பற்­றிப் பேச­வுள்­ளேன். அவர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் உள்­வாங்கி அதன் பின்­னர் தீர்­மா­னம் தொடர்­பில் ஒரு முடிவை எடுப்­போம். அதன்­பின்­னர் உங்­க­ளு­டன் நான் பேசு­கின்­றேன்.”- என்று அவ­ருக்­குப் பதி­ல­ளித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன்.

அதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ள­கத் தக­வல்­க­ளின்­படி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் அமைச்­சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை அந்­தக் கட்சி எடுக்­கும் என்று அறிய முடி­கின்­றது.

You might also like