கைதிகளிடையே மோதல்- 40 பேர் உயிரிழப்பு!!

பிரேசில் சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பார்வையாளர் நேரத்தின் போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக் தெரிவிக்கப்படுகின்றது

பிரேசில் சிறைகளில் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடியால் கைதிகள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது..

You might also like