கொட்டிலுடன் எரியூட்டப்பட்ட படகு!!

மன்னார்-பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்டுள்ளது.

பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த மீனவரது படகு, ஒரு தொகுதி வலைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கொட்டில் மற்றும் படகு திடீர் எனத் தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றியதை கண்டவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

கடற்படையினர் மற்றும் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மேலதிக விசாரனைகளை மேற்கொண்டனர்.

You might also like