side Add

கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் கால்­பந்­தாட்­டத்­தில் மகு­டம்!!

கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய 20 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி கிண்­ணம் வென்­றது.

றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­தி­யது கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி. றேஞ்­சர்­ஸைக் கட்­டுப்­ப­டுத்த விண்­மீன் அணி பெரும் சிர­மப்­பட்­டது. முடி­வில் 5:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது றேஞ்­சர்ஸ். றேஞ்­சர்ஸ் அணி­யின் சார்­பில் வர்­மன் 2, ஆர்த்­தி­கன், கீர்த்­தி­கன், ஆர்­நி­யன் ஆகி­யோர் தலா ஒவ்­வொரு கோலைப் பதி­வு­செய்­த­னர்.

ஆட்­ட­நா­ய­க­னாக றேஞ்­சர்ஸ் அணி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கீர்த்­தி­கன், தொட­ராட்ட நாய­க­னாக விண்­மீன் அணி­யைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த ரதன், சிறந்த கோல் காப்­பா­ள­ராவும் நியூட்­டன் அணி­யைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த அனு­சாந், இந்­தத் தொட­ரில் அதிக கோல்­க­ளைப் பதிவு செய்த வீர­ராக இமை­யா­ணன் மத்­திய அணி­ யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த அலெக்­சன் ஆகி­யோர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

You might also like