கொள்ளளவை நெருங்கும் கிளிநொச்சிக் குளங்கள்

57

கடந்த 24 மணி­நே­ரத்­தில் பெய்த மழை கார­ண­மாக கிளி­நொச்­சிக் குளங்­க­ளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.


நேற்று மாலை வரையில் குளங்களின் நீா்மட்ட வாசிப்பு வருமாறு:

இர­ணை­ம­டுக்­கு­ளம் 26 அடி­யா­க­வும், அக்­க­ரா­யன் குளம் 19 அடி 4 அங்­கு­ல­மா­க­வும், கல்­ம­டுக் குளம் 23 அடி 4 அங்­கு­ல­மா­க­வும், கரி­யாலை நாக­ப­டு­வான் குளம் 4 அடி 1 அங்­கு­ல­மா­க­வும், முறிப்­புக் குளம் 15 அடி 5 அங்­கு­ல­மா­க­வும், பிர­மந்­த­னா­றுக் குளம் 11 அடி­யா­க­வும், குட­மு­ருட்­டிக் குளம் 5அடி 1 அங்­கு­ல­மா­க­வும், வன்­னே­ரிக்­கு­ளம் 10 அடி­யா­க­வும் நீர்­மட்­டம் உயர்ந்­துள்­ளது.

இர­ணை­மடு குளத்­தின் நீர்­மட்­டம் நேற்று 19.8 அங்­கு­ல­மாக இருந்த நிலை­யில் நேற்று வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

You might also like