கோமாளி படத்தின் போஸ்டர் வெளியானது!!

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அடங்க மறு படத்துக்குப் பின்னர் ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார்.

நகைச்சுவைப் படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஐசரி தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இதில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

You might also like