சண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதியை புன­ர­மைப்­பது எப்­போது?

வலி.தென் மேற்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட ஆனைக்­கோட்டை உப அலு­வ­லக எல்­லைக்­குள் அமைந்­தி­ருக்­கும் சண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதி குறைந்­தது 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக எந்­த­வித திருத்­தமோ, மீள்­பு­ன­ர­மைப்போ செய்­யப்­ப­டா­மல் இருக்­கின்­றது.

இந்த வீதி உயர்ந்­தும், பதிந்­தும், குண்­டும் குழி­யு­மாகக் காணப்­ப­டு­கின்­றது. மழை­நீர் வழிந்­தோட முடி­யா­மல் தேங்கி நிற்­கின்­றது. நீர்­வ­ழிந்­தோ­டும் வாய்க்­கால்­கள் தூர்ந்து, நீர் வழிந்­தோட முடி­யா­த நிலை உள்ளது. வலி.தென் மேற்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட எல்லா வீதி­க­ளும் செப்­ப­னி­டப்­ப­டும் நிலை­யில் இந்த ஐய­னார் வீதி மட்­டும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது குறித்து இந்த வீ­தி­யைப் பயன்­ப­டுத்­தும் பொது­மக்­கள் விச­னம் தெரி­வித்­துள்­ளார்­கள். கடந்த காலங்­க­ளில் பிர­தேச சபை­யில் அங்­கம் வகித்த உறுப்­பி­னர்­கள் கூட இவ்­வீதி மின் திருத்­தம் பற்றி எந்­த­வித அக்­க­றை­யும் கொள்­ளா­தது மிக­வும் மன­வ­ருத்­தத்­திற்­கு­ரி­யது.

தற்­போது பிர­தேச சபை­யில் அங்­கம் வகிக்­கும் புதிய உறுப்­பி­னர்­க­ளா­வது இவ்­வீ­தி­யைப் பார்­வை­யிட்டு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வரவு செல­வுத் திட்­டத்­தி­லா­வது நிதி ஒதுக்­கீடு செய்து இவ்­வீ­தியை காலக்­கி­ரா­மத்­தில் புன­ர­மைக்க ஆவன செய்­யு­மாறு சண்­டி­லிப்­பாய் ஐய­னார் வீதி பொது­மக்­கள் சார்­பாக மிக­வும் தாழ்­மை­யு­டன் கேட்­டுக் கொள்­கின்­றேன்.

க.கன­க­சபை
சண்­டி­லிப்­பாய்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close