சிந்துபாத் ட்ரெய்லர் வெளியீடு!!

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சிந்துபாத்’. நடிகை அஞ்சலியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைத்துள்ளார் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

You might also like