சிம்­பாப்வே அதி­ப­ராக  – எமர்­சன் தெரி­வா­னார்!!

சிம்­பாப்வே அதி­பர் தேர்­த­லில் தற்­போ­தைய அதிபர்எமர்­சன் வெற்­றி­பெற்­றார் என்று அதி­கா­ரப் பூர்­வ­மாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

ஆபி­ரிக்க நாடான சிம்­பாப்­வே­யில் 37 ஆண்டு காலம் கொடி கட்­டிப்­ப­றந்த அதி­பர் ரொபர்ட் முகா­பே­வுக்கு எதி­ராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்­தது. இத­னால், முகா­பே­யின் பதவி பறிக்­கப்­ப­டு­கிற நிலை உரு­வா­னது.

இதை­ய­டுத்து, தாமாக முன்­வந்து கடந்த நவம்­பர் மாத இறு­தி­யில் அவர் பதவி வில­கி­னார். முகாபே பதவி வில­ய­தைத் தொடந்து அவர் ஜானு பி.எவ். கட்­சி­யில் இருந்­தும் நீக்­கப்­பட்­டார். இதை­ய­டுத்து எமர்­சன் அதி­ப­ரா­க­வும், கட்­சித் தலை­வ­ரா­க­வும் பொறுப்­பேற்­றார்.

கடந்த 30ஆம் திகதி பொதுத்­தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்று அவர் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்த நிலை­யில் அவ்­வாறு நேற்று அங்கு பொதுத்­தேர்­தல் நடத்­தப்­பட்­டது.

சிம்­பாப்­வே­யில் 270 தொகு­தி­க­ளில் 210 இடங்­க­ளுக்­குத்­தான் நேர­டித் தேர்­தல் நடத்­தப்­ப­டும். மிகு­தி­யுள்ள 60 இடங்­க­ளுக்கு விகி­தா­சார அடிப்­ப­டை­யில்­தான் இடங்­கள் வழங்­கப்­ப­டும்.

210 தொகு­தி­க­ளில் 140 இடங்­க­ளில் ஆளும் ஜானு பி.எவ். கட்சி வெற்­றி­பெற்று தனிப்­பெ­ரும் கட்­சி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இந்த அறி­விப்பு வெளி­வந்­தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close