சிறுவனுக்கு எமனான குழி!!

0 9

நீர்ப்பாசன திணைக்களத்தினால் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் அம்பாறை பக்கிஎல்ல பொலிஸ் பிரதேசத்திற்குற்பட்ட பக்கிஎல்ல கிராமத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

ஐந்து நாள்களுக்கு முன்பதாக குறித்த குழி தோண்டப்பட்ட போதிலும், அதனை சுற்றி பாதுகாப்பு மதில்களோ வேலிகளோ அமைக்கப்படாதமையின் காரணமாக இந்த விபத்து இடம்பற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மனுஹாச் சங்கல்ப ஏகநாயக என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பக்கிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like