சீன அரசின் நிதியுதவில் -ஏறாவூர் வைத்தியசாலையில் புதிய கட்டம்!!

சீன அரசின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திர சிகிச்சைக்கூடம், ஆரம்ப சிகிச்சைப்பிரிவு என்பன அமைக்கப்படவுள்ளன.

மூன்று மாடிகளைக் கொண்டதாக புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ் சுபைர், மாவட்டச் செயலர் எம். உதயகுமார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like