சுண்டுக்குளி கல்லூரிக்கு மிரட்டல் கடிதம்- ஒளிப்படத்திலுள்ள சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளா்.

“ முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளனர்“ என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட கல்லூரிக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

“இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோர். புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்.“ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like