செம்­ம­ணி­யின் மகள் துயின்ற நாள் இன்று

0 33

ஒரு காலத்­தில் முழு இலங்­கை­யை­யும் உலுக்­கிய ஒரு விட­யம் செம்­ம­ணிப் புதை­கு­ழி­கள். உலக அரங்­கி­லும் அது பயங்­க­ர­மான கன­தியை இலங்கை தொடர்­பில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இன்­னும் சொல்­லப்­போ­னால், 2009இல் வன்­னி­யில் நடந்­தே­றிய மனி­தப் பேர­வ­லத்துக் கான தொடக்­கப் புள்ளி என்­று­கூ­டச் சொல்­ல­லாம். ஏனெ­னில் ஒரு சில மாதங்­க­ளுக்­குள் பல நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் காணா­மல்­ஆக்­கப்­பட்­டார்­கள். இன்­னும் பலர் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டார்­கள். பின்­னர் அவர்­க­ளுக்­கும் என்ன நடந்­தது என்­பது தெரி­யா­ம­லேயே போனது. இன்று வரை­யில் அதற்­கொரு முடி­வும் தெரி­ய­வில்லை.

அவர்­கள் எல்­லோ­ரும் கொன்று புதைக்­கப்­பட்­டார்­கள் என்­கிற உண்­மையை ஓர் இரா­ணு­வச் சிப்­பாய் நீதி­மன்­றத்­தில் உரத்­துச் சொன்­னான். ஓர் இளம் தமிழ்ப் பெண்ணைப் பாலி­யல் வதை புரிந்து கொன்று புதைத்­த­தற்­கா­கச் சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிப்­பாய் அவன். சோம­ரத்ன ராஜ­பக்ச என்­கிற பெயர் கொண்ட அந்­தச் சிப்­பாய் சொன்ன செய்தி, இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்ட பல தமிழ் இளை­ஞர்­க­ளும் பெண்­க­ளும் கொல்­லப்­பட்­ட பின்­னர் யாழ்ப்­பாண நக­ரத்­தின் நுழை­வா­யி­லான செம்­மணி வயல் வெளிப் பகு­தி­யில் புதைக்­கப்­பட்­ட­னர் அல்­லது உயி­ரோடு அந்த வெளிக்­குக் கொண்டு வரப்­பட்டுக் கொன்று புதைக்­கப்­பட்­ட ­னர். அப்­ப­டிக் கொண்டு வரப்­பட்ட பெண்­க­ளில் பல­ரும் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு எல்­லாக் கொடு­மை­க­ளை­யும் புரிந்த மேல­தி­கா­ரி­கள் தப்பி வெளியே இருக்­கும்­போது அவர்­க­ளின் உத்­த­ர­வு­க­ளைச் செயற்­ப­டுத்­திய, அதா­வது அவர்­கள் சொன்­ன­தன் பேரில் சட­லங்­க­ளைப் புதைத்த தனக்­குச் சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்­டமை நீதி­யல்ல என்ற கோபத்­தி­லேயே அந்­தச் சிப்­பாய் நீதி­மன்­றத்­தில் அனைத்து உண்­மை­க­ளை­யும் கக்­கி­னான். நீதி­மன்­றத்­தின் தொடர் விசா­ர­ணை­க­ளில் அவன் சொன்­ன­வற்­றில் உண்மை இருந்­தது என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­தும் வகை­யில் 15 பேரின் எலும்­பு­க­ளும் எச்­சங்­க­ளும் செம்­மணி வெளியில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அதுவே பின்­னர் செம்­ம­ணிப் படு­கொ­லை­கள் என்று வெளி­உ­ல­கில் அறி­யப்­பட்­டது.
அந்­தப் பெரும் மனி­தப் புதை­கு­ழியை அடை­யா­ளம் காட்­டி­யது பாட­சாலை மாண­வி­யான கிரு­ஷாந்தி குமா­ர­சு­வா­மி­யின் பாலி­யல் வதைப் படு­கொ­லை­தான். உயர்­த­ரப் பரீட்சை முடிந்து வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த அந்த இளம் குருத்தை நாவற்­கு­ழிச் சந்­தி­யில் காவ­லுக்­கி­ருந்த ஓநாய்­கள் சிதைத்­துப் புதைத்­தன. அவ­ரைத் தேடிச் சென்ற தாய், தம்பி மற்­றும் அய­ல­வ­ரை­யும் கொன்று புதைத்­த­ன.

பல அழுத்­தங்­க­ளுக்­குப் பின்­னர் அதில் ஈடு பட்ட படை­யி­ன­ருக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்டு அவர்­கள் மீதான குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டன. ராஜ­பக்ச உள்­ளிட்ட குற்­ற­வா­ளி­கள் 6 பேருக்­கும் சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கொன்று புதைக்­கப்­பட்ட கிரு­ஷாந்­தி­யின் 22ஆவது நினைவு தினம் இன்று. கிரு­ஷாந்­தி­யும் செம்­ம­ணி­யும் தமிழ் இனப்­ப­டு­கொ­லை­யின் அழிக்க முடி­யாத காத்­தி­ர­மான அடை­யா­ளங்­கள். அர­சி­யல் ஊழி­யின் விளை­வாக கிரு­ஷாந்­தி­யும் செம்­ம­ணி­யும் மறக்­கப்­பட்­டு­விட்­ட­தும் அவை பற்­றிப் பேசு­வ­தைத் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் மறந்­து­போ­ன­தும் தமிழ்த் துன்­பி­யல்­கள்.

இன்று பல நூறு நாள்­க­ளைத் தாண்­டி­யும் வீதி­க­ளில் அமர்ந்து போரா­டி­வ­ரும் காணா­மல்­ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளைப் போலவே யாழ்ப்­பா­ணத்­தில் காணா­மல்­ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் 1998 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2005ஆம் ஆண்­டு­வ­ரை­யில் வீதி­க­ளி­லும் அலு­வ­ல­கங்­க­ளின் முன்­னி­லை­யி­லும் பல போராட்­டங்­களை முன்­னெ­டுத்­த­ிருந்தனர். அவற்­றுக்கு எந்­தப் பதி­லும் கிடைக்­கா­ம­லேயே அவர்­கள் தளர்ந்து, ஓய்ந்து போய்­விட்­ட­னர். செம்­ம­ணிப் படு­கொ­லை­கள் வழக்­கும் எங்­கென்றே தெரி­யா­மல் தொலைந்­து­போய்­விட்­டது.

கிரு­ஷாந்­தி­யின் நினை­வு­தி­ன­மான இன்­றா­வது தமிழ் இனத்துக்கு எதி­ரான ஒட்­டு­மொத்த ஒடுக்­கு­மு­றை­க­ளுக்­கா­கவும், கொடூ­ரங்­க­ளுக்­கா­க­வும் குரல்­கொ­டுப்­ப­தற்­கான விழிப்பை ஏற்­ப­டுத்­து­வோம் வாரீர்!

You might also like