“செயற்பட்டு மகிழ்வோம்“- விளையாட்டு நிகழ்வு வவுனியாவில்!!

செயற்பட்டு மகிழ்வோம் எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, வவுனியா ஒமந்தை மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

தரம் 03 தொடக்கம் தரம் ஐந்து மாணவர்களிற்கான இப்போட்டி நிகழ்வில் 12 வலயங்களைச் சேர்ந்த 108 அணிகள் பங்கு பற்றின.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அண்ணமலர் சுரோந்திரன், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like