செய்தியாளர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!!

0 7

‘ரெய்­டெர்ஸ்’ செய்­திச் சேவை­யின் இரண்டு செய்­தி­யா­ளர்­களை மியன்­மார் அரசு சிறை­யி­ல­டைத்து வைத்­துள்­ளது. மியன்­மா­ரின் ராக்­கைன் மாகா­ணத்­தில் வசிக்­கின்ற முஸ்­லிம்­களை இனச் சுத்­தி­க­ரிப்­புச் செய்­யும் வகை­யில் அந்­தப் பகு­தி­யில் வசிக்­கின்ற பௌத்த பெரும்­பான்­மை­யி­ன­ரு­டன் இணைந்து மியன்­மார் அரச படை­கள் செயற்­பட்­டன என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் செய்­தி­களை ‘ரெய்­டெர்ஸ்’­இன் இவ்­விரு செய்­தி­யா­ளர்­க­ளும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர்.

இந்த இரண்டு செய்­தி­யா­ளர்­க­ளை­யும் கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ளது மியன்­மார் அரசு. குறித்த செய்­தி­யா­ளர்­களை விடு­விக்­கக்­கோ­ரிப் பல பாகங்­க­ளில் இருந்­தும் குரல்­கள் எழுந்­த­வண்­ண­மி­ருக்­கின்­றன.

ஆனால், மியன்­மார் நாட்­டுத் தலை­வ­ரான ஆங்­சாங்­சூகி இது பற்றி எவ்­வி­தத்­தி­லும் அலட்­டிக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார். இந்த நிலை­யில் மியன்­மா­ரில் சிறைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற செய்­தி­யா­ளர்­களை விடு­விப்­ப­தற்கு மியன்­மார் அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கு­மாறு அமெ­ரிக்க செனற்­சபை உறுப்­பி­னர்­கள் கோரி­யி­ருக்­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வின் குடி­ய­ர­சுக் கட்சி, மற்­றும் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் பல­ரும் குறித்த செய்­தி­யா­ளர்­களை விடு­விக்­க­வேண்டி மியன்­மார் அர­சுக்கு அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் அழுத்­தம் கொடுக்­க­வேண்­டும் என்று கோரி­யி­ருப்­ப­தா­கப் பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

You might also like