side Add

சொல்­லை­வி­ட­வும் செயலே சிறந்­தது!!

இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வொன்றை விரை­வில் கண்டு விட­லாம் என­வும், அர­சி­யல் குழப்­பத்­தின் போது கூட்­ட­மைப்­புச் சிறப்­பா­கக் செயற்­பட்­ட­தால் தமி­ழர்­கள் சிங்­க­ள­ மக்­க­ளின் மனங்­களை வென்­றுள்­ளார்­கள் என்­றும் அமைச்­சர் ராஜி­த­சே­னா­ரத்ன செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்­ளார். அதே­வேளை தென்­னி­லங்­கை­யில் கூட்­ட­மைப்­பின் மதிப்பு அதி­க­ரித்­து­விட்­ட­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுமந்­தி­ரன் கருத்­து­ரைத்­துள்­ளார்.

இன­வா­தம் வலு­வி­ழந்து போகா­மையே
தீர்­வின்­மைக்கு அடிப்­ப­டைக் கார­ணம்!
இவர்­கள் இரு­வ­ரும் கூறி­யது உண்­மை­யாக இருக்­கும் பட்­சத்­தில், அர­சி­யல் தீர்­வொன்­றின் மூல­மாக இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வொன்­றைக் காண்­ட­டை­யும் செயற்­பாடு என்­பது, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சுக்கு இல­கு­வா­கி­வி­டும். ஏனெ­னில் நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளி­லி­ருந்து இனப்­பி­ரச்­சினை என்­பது தீர்­வின்றி இடை­ய­றாது தொடர்ந்து வரு­வதைக் காண முடி­கின்­றது. இன­வா­தம் வலு­வி­ழந்து போகா வண்­ணம் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­கள் சிங்­கள மக்­களை தவ­றாக வழி­ந­டத்தி வரு­வ­தால் இனப்­பி­ரச்­சி­னைக்கு சுமூ­க­மான தீர்­வொன்றைக் காண முடி­ய­வில்லை. அது­மட்­டு­மன்றி காலத்­துக்­குக் காலம் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களே இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. மொழி­வா­ரி­யா­கத் தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­மக்­க­ளும் பிரிக்­கப்­பட்­டி­ ருந்­தா­லும் பல விட­யங்­க­ளில் ஒன்­று­பட்­டி­ருப்­ப­தைக் காண முடி­கின்­றது.

கூட்­ட­மைப்பு சூழ்­நி­லை­களை புரிந்­து­ணர்­வோடு
கையாள முயற்­சிக்­கின்­றது!
அண்­மை­யில் அரச தலை­வர் தன்­னார்­வத்­தோடு ஏற்­ப­டுத்­திய அர­சி­யல் குழப்­பங்­கள் மேலும் நீடிக்­காது முடி­வு­றுத்­தப்­பட்­ட­மைக்கு கூட்­ட­மைப்­பின் பங்­க­ளிப்பே முதன்­மைக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. சூழ்ச்­சி­க­ர­மான குழப்­பங்­கள் நடந்­தே­றிய போது சூழ்­நி­லை­களை புரிந்­து­ணர்­வோடு கையா­ளாது கூட்­ட­மைப்பு ஒதுங்கி நிற்­ப­தற்கு முடிவு செய்­தி­ருந்­தால் நாட்­டின் நிலமை மோச­மான கட்­டத்தை எட்­டி­யி­ருக்­கும்.

இந்த உண்மையைச் சிங்­கள மக்­கள் உணர்ந்து கொண்­ட­தன் விளை­வா­கவே கூட்­ட­மைப்­பின் மீதான மதிப்­பை­யும், கரி­ச­னை­யு­டன் கூடிய பார்­வைப்­பு­லத்­தை­யும் வெளிப்­ப­டுத்த எத்­த­னித்­துள்­ள­னர் என­லாம். இந்த மன­மாற்­றத்தை ஆட்­சி­யா­ளர்­கள் சரி­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும். மகிந்த தரப்பு வழக்­கம் போல அர­சின் முயற்­சி­க­ளுக்கு முட­டுக்­கட்டை போடு­வார்­கள் என்­பது தெரிந்த விட­ய­மா­யி­னும், அரசு துணி­வு­டன் அதை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருக்க வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வ­தன் மூல­மா­கத் தமக்­குக் கௌர­வ­மான அர­சி­யல் தீர்­வொன்று கிடைக்­கு­மெ­னத் தமிழ்­மக்­கள் எதிர்­பார்ப்­போடு காத்­தி­ருக்­கின்­ற­னர். கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் இதையே அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்­றார். இறுக்­க­மான பிடி­மா­னத்­தோடு எதற்­கும் வளைந்து கொடுக்­காத உறுப்­பு­ரை­க­ளைக் தன்­ன­கத்தே கொண்­டுள்ள, நடை­மு­றை­யில் உள்ள அர­ச­மைப்­பின் மூல­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணவே முடி­யாது. இதன் கார­ணம் கொண்டே புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது.

தமிழ் மக்­கள் அதி­கா­ரப் பகிர்­வை­யும்
அர­சி­யல் தீர்­வை­யும் வேண்டி நிற்­கின்­ற­னர்!
தனி­நாடு கேட்டு ஆயு­த­மேந்­திப் போரா­டிய தமி­ழர்­கள் இன்று அதி­கா­ரப் பகிர்­வை­யும் அர­சி­யல் தீர்­வை­யும் கேட்டு நிற்­கின்­ற­னர். இவற்றை வழங்­கு­வ­தால் சிங்­கள மக்­கள் எந்த வகை­யி­லும் பாதிக்­கப்­பட மாட்­டார்­கள். மேலும் மீண்­டு­மொரு ஆயு­தப் போரட்­டம் இடம்­பெ­று­வ­தை­யும் அவர்­கள் விரும்­பவே மாட்­டார்­கள். ஏனென்­றால் போரி­னால் பாதிக்­கப்­பட்­டார்­கள் என்­பதை நாம் மறந்­து­வி­ட­லா­காது. போரைக் கார­ணம் காட்டி பணத்­தைச் சம்­பா­தித்த அர­சி­யல்­வா­தி­கள் இந்த நாட்­டில் இருக்க­த்­தான் செய்­கின்­ற­னர்.

இவர்­கள் தமது சுய நன்­மைக்­காக எதை­யும் செய்­யக்­கூ­டி­ய­வர்­கள். இவர்­க­ளுக்கு அப்­பாவி மக்­கள்­மீது அக்­கறை ஒரு­போ­துமே ஏற்­பட்­ட­தில்லை. இத்­த­கைய அர­சி­யல்­வா­தி­க­ளால்­தான் நாட்­டின் அமை­திக்­கும் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான ஒற்­று­மைக்­கும் பங்­கம் ஏற்­ப­டு­கின்­றது. அர­ச­மைப்­புக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வ­தென்­பது தண்­ட­ணைக்­கு­ரிய ஒரு செய­லா­கும். ஆனால் மகிந்­தவை தலைமை அமைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­ய­தன்­மூ­ல­மாக அரச தலை­வரே அர­ச­மைப்­புக்கு எதி­ராக நடந்­து­கொண்­டுள்­ளார். உயர்­நீ­தி­மன்­றம் சரித்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தீர்­வொன்றை வழங்­கி­யி­ருக்­கா­விட்­டால் இந்த நாடு மிக மோச­மான அடை­வு­க­ளைக் கண்­டு­கொண்­டி­ருக்­கும்.

தீர்வு காணும் விட­யத்­தில் ரணில்
சாணக்­கி­யத்­தோடு செய­லாற்ற வேண்­டும்!
விடு­த­லைப் புலி­கள் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­த­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள். இரா­ஜ­தந்­தி­ர­மா­கச் செயற்­பட்டு புலி­க­ளைப் பிள­வு­ ப­டுத்­தி­ய­தன் மூல­மாக அவர் இதைச் சந்­தித்­தார். ஆனால் இதுவே அவர் அரச தலை­வர் பத­வி­யில் அமர்­வ­தற்­கான கன­வைக் கலைத்­து­விட்­டது. மகிந்த அந்­தப் பத­வி­யில் அமர்­வ­தற்­கான வாய்ப்­பை­யும் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது என­லாம். இருந்­த­போ­தும் கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வுக்கு எதி­ராக மைத்­தி­ரியை நிறுத்­தி­ய­தன் மூல­மா­கத் தமது தோல்­விக்­குப் பழி­வாங்­கி­யும் விட்­டார்.அண்­மை­யில் இடம்­பெற்ற ஒக்­ரோ­பர் சூழ்ச்சியைக்­கூட எதிர்­கொண்டு கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வோடு மகிந்­தவை வீட்­டுக்கு அனுப்பி விட­வும் அவ­ரால் முடிந்­துள்­ளது. ஆக, அர­சி­யல் சாணக்­கி­யத்­தில் கை தேர்ந்­த­வ­ராக அடை­யா­ளம் கண்­டு­கொள்­ளப்­பட்­டுள்ள ரணில், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்­வைக் காண்­ப­தில் உத்­வே­கத்­து­டன் செய­லாற்ற முன்­வர வேண்­டும்.

சந்­தர்ப்­பங்­கள் செயல்­வ­டி­வம் பெற வேண்­டும்!
தமிழ்­மக்­க­ளுக்­குத் தமது காலத்­தி­லேயே ஒரு தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்­ப­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் அக்­க­றை­யு­டன் செயற்­பட்டு வரு­கின்­றார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அவர் வகித்த தலைமை அமைச்­சர் பத­வி­யில் மீண்­டும் அமர்த்­து­வ­தற்­கான முயற்­சி­யில் சம்­பந்­த­னின் அர­சி­யல் மதி­நுட்­பம் பெரி­தும் உதவி புரிந்­துள்­ளது. இதுவே சிங்­கள மக்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் ஏற்­ப­டுத்­து­வ­தற்­குக் கார­ண­மா­க­வும் அமைந்­து­விட்­டது.
எனவே சொல்­வ­தோடு மட்­டுமே நின்­று­வி­டாது அதை செய­லில் காட்ட வேண்­டிய சந்­தர்ப்­பம் ரணில் தலை­மை­யி­லான அர­சுக்கு வாய்த்­துள்­ளது. அதைச் சரி­யான முறை­யில் பயன்­கொள்­வ­தற்கு அதி­க­பட்ச முயற்­சி­களை அவர்­கள் மேற்­கொள்ள வேண்­டும். இந்த வாய்ப்பு நன்­மு­றை­யில் பய­னு­று­தி­யாக்­கப்­பட்டு அர­சி­யல் தீர்வு குறித்த பொருத்­த­மான பின்­னூட்­டங்­கள் கண்­டு­கொள்­ளப்­ப­டின், இலங்­கை­யின் அர­சி­யல் வர­லாற்­றில் அவ­ரது பெயர் தனித்­து­வ­மான இடத்­தைப் பெற்­றி­ருக்­கும்.

You might also like