ஜெயலலிதாவாக நடிக்க- ஹிந்தி நடிகைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

தமிழ் சினிமா, தமிழக அரசியல், இந்திய அரசியல் என தான் சார்ந்த துறைகளில் அதிகம் கவனிக்கப்பட்ட ஆளுமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அவருடைய வாழ்க்கை வரலாறு இரண்டு தனித்தனி திரைப்படங்களாகவும், ஒரு தொடர் கதையாகவும்உருவாகி வருகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக, விஜய் இயக்கும் தலைவி 39 படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அது ஏறக்குறைய உறுதியான தகவலாகப் பரவி வருகிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனாவுக்கு 25 கோடி ரூபா( இந்திய) சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மை என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமை கங்கனாவுக்குச் சேரும்.

You might also like