ஞான­சா­ர­ருக்கு பொது மன்­னிப்பு; வாய்ப்­புள்­ளது என்­கி­றார் சம்­பிக்க

பொது பல­சே­னா­வின் பொதுச்­செ­ய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்குப் பொது­மன்­னிப்பு அளிக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்­ளார்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கில் ஞான­சார தேர­ருக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், கடந்த புதன் கிழமை ஆறு ஆண்­டு­கள் அனு­ப­விக்­கும் வகை­யில், 19 ஆண்டு சிறைத்­தண்­ட­னையை விதித்­தி­ருந்­தது.

இது குறித்து நேற்று முன்­தி­னம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளித்­த­போதே பெரு­ந­கர அபி­வி­ருத்தி மற்­றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க இவ்­வாறு தெரி­வித்­தார்.

ஞான­சார தேர­ருக்குப் பொது­மன்­னிப்பு அளிப்­பது குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கவ­னம் செலுத்த வாய்ப்­பு­கள் உள்­ளன.

எனி­னும், ஞான­சார தேர­ருக்கு அரச தலை­வ­ரின் பொது­மன்­னிப்பு அளிக்­கப்­ப­டும் என்று என்­னால் உறு­திப்­ப­டுத்த முடி­யாது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close