side Add

டெங்கால் இருவர் உயிரிழப்பு!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனம் காணபட்டுள்ளனர். அத்துடன் இருவர் உயிரிழந்தனர் என்று வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 நோயாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோய்த் தாக்கத்தின் மூலம் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததுடன், இன்னுமொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like