தங்க நகைகளுடன் தந்தையும், மகனும் கைது!!

சுமார் 1.1 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த தந்தையும் மகனும் கட்டுநாயக்க சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர் மேலதிக சுங்கப்பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like