side Add

தண்ணீர் என அசிட் அருந்திய சிறுவன் – மருத்துவமனையில் !

தண்ணீர் என்று நினைத்து அசிட் அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை மட்டுவில் கிழக்கு சந்திரபுரத்தில் இடம் பெற்றுள்ளது.

நகை உற்பத்திக்கென கொள்வனவு செய்யப்பட்ட அசிட்­டை விளையாடிய களைப்பில் ஓடிவந்த சிறுவன் தண்ணீர் என்று நினைத்து அருந்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து சிறுவன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டார் என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like
X