தனியாக வசித்த பெண் -அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த பெண் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

You might also like