தமி­ழர்­க­ளின் கால நியதி!

2 349

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மகிந்­தவை ஆத­ரிக்­க­வும் முடி­யாது, ரணிலை நம்­ப­வும் முடி­யாது என்று அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்­து­ரை­யா­டிக் கொண்­டி­ருக்­கும்­போதே, பின் கத­வால் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வ­ரைத் தன் பக்­கம் உருவி எடுத்­து­விட்­டார் மகிந்த ராஜ­பக்ச. தனக்கு ஆத­ரவு தரு­மாறு கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னி­டம் நேர­டி­யா­கப் பேசிய பின்­னரே மகிந்த அவ­ரது முது­கில் குத்­தும் கைங்­க­ரி­யத்­தைச் செய்­தார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

மகிந்த மீண்­டும் அரி­யணை ஏறக்­கூ­டாது என்­கிற கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாட்டை வலுப்­ப­டுத்­து­வ­தாக மகிந்­த­வின் இந்­தச் செயல் அமைந்­துள்­ள­மை­யை­யும் ஏற்­றுத்­தான் ஆக­வேண்­டும். அதே­நே­ரத்­தில், ரணிலை ஆத­ரிக்­கா­மல் விடு­வ­தன் மூலம் மகிந்­தவை மறை­மு­க­மா­கக் கூட்­ட­மைப்பு ஆத­ரித்­தது என்­கிற பழிச் சொல் குறித்­துக் கூட்­ட­மைப்பு அஞ்­சு­வ­தி­லும் நியா­யங்­கள் இருக்­கவே செய்­கின்­றன. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் இது குறித்த கவ­லையை அதன் தலை­வர் சம்­பந்­த­னும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். மகிந்­தவை அகற்­று­வ­தற்கு நாமும் கார­ண­மாக இருந்­து­விட்­டுப் பின்­னர் அவரை மீண்­டும் ஆட்­சிக்­குக் கொண்டு வரு­வ­தற்­கும் நாம் கார­ண­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது என்­பதே அவ­ரது நியா­யம்.

அதே­நே­ரத்­தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மல் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இழுத்­த­டித்­தது மட்­டு­மல்­லா­மல் வடக்கு, கிழக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைப் பல­வீ­னப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­க­ளை­யும் ரணில் எடுத்­தார் என்­கிற குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன என்­ப­தால் ரணிலை ஆத­ரிப்­ப­தென்­ப­தும் சிக்­க­லா­ன­து­தான் என்­கிற தர்­ம­சங்­க­டத்­தை­யும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

ஆக மொத்­தத்­தில் சிங்­க­ளத் தலை­வர்­கள் குறித்து வர­லாறு கற்­பித்த பாடம் கிஞ்­சித்­தும் தவ­றில்லை என்­பதை மகிந்­த­வும், ரணி­லும் மீண்­டும் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளோடு சேர்ந்­தி­யங்­க­வும் முடி­யா­மல் தனித்­துச் செல்­ல­வும் முடி­யா­மல் கையறு நிலை­யில் தமி­ழர்­க­ளின் வாழ்வு அல்­லல்­ப­டு­வ­தி­லும் மாற்­றம் வரு­வ­தாக இல்லை. இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வுக் கரம் நீட்­ட­வேண்­டிய இந்­தி­யா­வும் மேற்­கு­லக நாடு­க­ளும், இப்­போ­தும் தமது நலன்­க­ளுக்­கா­கத் தமி­ழர்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் மட்­டுமே குறி­யாக இருக்­கின்­றன. இத­னா­லேயே இலங்­கை­யில் இனப் பிரச்­சினை ஒரு முடி­வுக்கு வரு­வதை இந்த நாடு­கள் விரும்­பு­வ­ தில்­லையோ என்­கிற சந்­தே­க­மும் ஏற்­ப­டு­கின்­றது.

ஆனால், இந்த நாடு­க­ளின் நலன்­க­ளுக்கு ஏற்­பவே, பன்­னாட்டு ஆத­ரவு மற்­றும் தலை­யீடு என்­கிற காலா­வ­தி­யா­கிப்­போன நம்­பிக்­கை­க­ளு­டன் ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கான முடி­வைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்­ளது. போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்தை நம்­பிக் காரி­ய­மாற்­றும் செயற்­பாட்­டின் மூலம் ஒரு புதிய அர­ச­மைப்­பைக்­கூட இலங்­கை­யில் கொண்­டு­வர முடி­ய­வில்லை என்­கிற படிப்­பினை இருந்­த­போ­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள இந்த முடி­வின் விளை­வு­களை அனு­ப­விப்­ப­தற்­குத் அது சாத­கமோ, பாத­கமோ தமிழ் இனம் தயா­ராக வேண்­டி­ய­து­தான் கால நியதி.

You might also like