தமிழர்களின் அரசியல் துன்பியல்

பன்னாட்­டுச் சமூ­கத்­துக்­குத் தான் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறு­வது என்­பது கொழும்பு அர­சுக்­கும் அதன் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் புதி­தான ஒன்­றல்ல. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யி­லி­ருந்­த­போ­தும் பன்­னாட்­டுச் சமூ­கத்துக்குப் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தார். குறிப்­பா­கப் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரும் விட­யத்­தில் கொழும்பு எடுத்த மனி­தா­பி­மா­ன­மற்ற அணு­கு­மு­றை­க­ளைக் கண்­டு­கொள்­ளா­மல் இருப்­ப­தற்கு இந்த வாக்­கு­று­தி­களை அவர் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார். போரை முடித்­த­ தும் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்டு, நிரந்­த­ர­மான அர­சி­யல் தீர்வை அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­துக்­கும் அப்­பாற் சென்று வழங்­கு­வேன் என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால் அந்த வாக்­கு­றுதி எது­வும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதற்­குக் கிஞ்­சித்­தும் மாற்­ற­மில்­லாத அணு­கு­மு­றை­யையே தற்­போ­தைய மைத்­திரி – –ரணில் ஆட்­சி­யும் கைக்­கொள்­கி­றது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் பன்­னாட்­டுச் சமூ­கத்துக்குப் பகி­ரங்­க­மா­கத் தான் வழங்­கிய வாக்­கு­று­தியை அது அடி­யோடு நிரா­க­ரிக்­கின்­றது. போர்க் கால மீறல்­க­ளுக்­குப் பொறுப்­புக்­கூ­றும் செய ல்­மு­றை­க­ளில் வெளி­நாட்­டுப் பங்­க­ளிப்பை ஏற்­போம் என்­றும் அதற்­கான செயல்­மு­றையை உரு­வாக்­கு­வ­தில் ஐ.நாவின் வழி­காட்­ட­லை­யும் வல்­லு­நத்­து­வச் சேவை­யைப் பெறு­வோம் என்­றும் வழங்­கிய வாக்­கு­று­தியை அடி­யோடு நிரா­க­ரிக்­கின்­றது கொழும்பு.

அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­குக் கடந்த 4 ஆண்­டு­க­ளில் ஒரு சிறு அடி­யைக்­கூட எடுத்து வைக்­கா­தது மட்­டு­மல்ல அதைப் பகி­ரங்­க­மா­கச் சொல்­லும் துணி­வை­யும் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்­பது அவர்­கள் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னையை எந்­த­ள­வுக்­குத் துச்­ச­மாக மதிக்­கி­றார்­கள் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

2015ஆம் ஆண்­டில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பான தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தில் இருந்தே பன்­னாட்­டுப் பங்­க­ளிப்பை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்து வந்­தி­ருக்­கி­றார். அது அவ­ரது சொந்­தக் கருத்து, பன்­னாட்­டுச் சமூ­கத்துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யி­லி­ருந்து அவ­ரால் அப்­படி இல­கு­வா­கப் பின்­வாங்­கிச் செல்ல முடி­யாது, எப்­ப­டி­யென்­றா­லும் அவர் அந்­தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யே­யா­க­வேண்­டும் என்­றெல்­லாம் அப்­போது தமிழ் அர­சி­யல் தலை­மை­க­ளி­டம் இருந்து கருத்­துக்­கள் வெளிப்­பட்­டன. பன்­னாட்­டுச் சமூ­கத்துக்குக் கொழும்பு வழங்­கிய வாக்­கு­று­தி­யி­லி­ருந்து அத­னால் வில­கிச் செல்ல முடி­யாது என்று அவர்­கள் உறு­தி­யாக வலி­யு­றுத்­தி­னார்­கள்.

ஆனால், மைத்­தி­ரி­பா­ல­வின் உறு­தி­யான நிலைப்­பாட்­டைத் தொடர்ந்து தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் பின்­னர் அதே நிலைப்­பாட்­டைப் பட்­டும் படா­ம­லும் வெளிப்­ப­டுத்­தி­னார். இலங்கை போன்ற நாடு­க­ளுக்கு இத்­த­கைய பன்­னாட்­டுப் பங்­க­ளிப்­பு­ட­னான கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றை­கள் சாத்­தி­ய­மா­க­மாட்டா என்று அவ­ரும் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­தார். தமிழ்த் தலை­வர்­கள் அதைக் கேட்ட பின்­ன­ரும் பன்­னாட்­டுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை மீற முடி­யாது, அதனை நிறை­வேற்­றியே தீர­வேண்­டும், அப்­படி நிறை­வேற்­றாது போனால் அது அடுத்த கட்­டத்துக்குத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் முன்­னே­று­வ­தற்கு வழி­வ­குக்­கும் என்­றெல்­லாம் கூறி­னார்­கள். குறிப்­பா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­ன­ணித் தலை­வர்­களே இவ்­வாறு வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தினார்­கள்.

ஆனால் இன்றோ கொழும்­பில் ஆட்­சி­யுள்ள இரு தலை­வர்­க­ளுமே பன்­னாட்­டுத் தலை­யீடு எமக்­குத் தேவை­யில்லை என்று வெளிப்­ப­டை­யா­கவே கூறு­கின்­றார்­கள். ஐ.நா. பொதுச் சபை­யில் இதனை ஒரு கோரிக்­கை­யா­கவே வெளிப்­ப­டுத்­து­கி­றார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. லண்­ட­னில் உரை­யாற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அத­னையே வழி­மொ­ழி­கி­றார். அத­னைக் கேட்­டு­விட்­டும் தமிழ்த் தலை­வர்­கள் வாளா­வி­ருக்­கி­றார்­கள் என்­பது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் துன்­பி­யல். பன்­னாட்­டுச் சமூ­கம் இருக்­கி­றது, பன்­னாட்­டுச் சமூ­கம் பார்த்­துக்­கொள்­ளும் என்று அவர்­கள் சொல்லி வந்­த­தன் பொருள், சிங்­க­ளத் தலை­மை­கள் எதைச் செய்­தா­லும் பன்­னாட்­டுச் சமூ­கம் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கும் என்­ப­தைத்­தான் என்று புரிந்­து­கொள்­ளா­மல்­விட்­டது தமி­ழர்­க­ளின் தவ­று­தானா? காலம் கால­மா­கத் தமி­ழர்­களை ஏமாற்றி வரும் சிங்­க­ளத் தலை­மை­க­ளி­லி­ருந்து ஒரு துளி­ய­ள­வும் மாறி­வி­டாத மற்­றொரு தலை­மை­யைத்­தான் தமி­ழர்­க­ளும் சேர்ந்து தெரிவு செய்­தி­ருக்­கி­றோம் என்­பது பெரும் வெட்­கக்­கேடு!

You might also like