தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும்

சம்­பந்­தன் இடித்­து­ரைப்பு

குற்­றம் புரிந்­த­வ­ராக இருக்­க­லாம் அல்­லது சந்­தே­கத்­தில் சிறை­யில் இரு­ப­வர்­க­ளாக இருக்­க­லாம், ஆனால் அனைத்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டும் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­னார்.
இழப்­பீ­டு­க­ளுக்­கான பணி­ய­கத்தை உரு­வாக்­கும் சட்­டம் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும் போதே எதிர்க்­கட்சி தலை­வர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

காலம் தாழ்த்­தி­யே­னும் இந்­தப் பணி­ய­கம் உரு­வாக்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. பணி­ய­கம் உரு­வாக்­கப்­பட்டு உண்மை, நீதி, பொறுப்­புக்­கூ­றல், இழப்­பீ­டு­கள் மற்­றும் மீண்­டும் இவை இடம்­பெ­றாமை என்­பன நிலை­மாறு பொறி­மு­றை­யின் அம்­சங்­க­ளா­கும். இவை நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தில் முக்­கி­யம் பெறு­கின்­றது.

இந்த சட்­டம் வர­வேற்­க­தக்க விட­யம். ஆனால் இது நீதி­யைப் புறக்­க­ணிக்­கும் வகை­யில் அமை­யக் கூடாது. இழப்­பீ­டு­கள் தொடர்­பான பணி­ய­கம் மூல­மா­க­வே­னும் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை உறு­திப்­ப­டுத்த முடி­யும் – என்­றார்.

இந்த விவா­தத்­தில் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், போரின் போது பல பாதிப்­புக்­கள் ஏற்­பட்­டன. அத­னு­டைய உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்­டும். அதே­போல் மோதல்­கள் இடம்­பெற்­றது ,இதில் கற்­றுக்­கொண்ட பாடங்­களை கொண்டு தீர்­வு­கள் நோக்கி பய­ணிக்க வேண்­டும். மாறாக பழி­வாங்­கல் கார­ணி­க­ளாக அமைந்­து­வி­டக்­கூ­டாது. இழப்­பீ­டு­கள் பற்­றிய அலு­வ­ல­கத்­தால் பரிந்­து­ரைக்­கப்­ப­டும் கொள்­கைத் திட்­டங்­கள் அமைச்­ச­ர­வை­யி­னால் அனு­ம­திக்­கப்­ப­டும்­போது அவை அர­சி­யல் மயப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று சந்­தே­கம் உள்­ளது.

சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றம் வழங்­கி­யுள்ள சட்­ட­ரீ­தி­யான வியாக்­கி­யா­னத்­தைப் புரிந்து கொள்ள கடி­ன­மாக உள்­ளது. உத­வி­கள் வழங்­கும் நோக்­கில் செயற்­ப­டும் இந்த விட­யங்­க­ளில் இது­போன்ற விட­யங்­க­ளும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­யில் சட்­டத்தை நிறை­வேற்றி கூடிய விரை­வில் இழப்­பீ­டு­கள் பற்­றிய பணி­ய­கத்­தின் செயற்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று நம்­பு­கின்­றோம் – என்­றார்.

You might also like