தலை­வ­னுக்­காக ஏங்கி நிற்­கும் – ஈழத் தமி­ழர்­கள்!!

0 111

ஈழத் தமி­ழ­ர­களை வழி நடத்­திச் செல்­வ­தற்கு பிர­பா­க­ர­னுக்கு நிக­ரா­ன­தொரு தலை­வரே தேவை­யென்ற கருத்து தமி­ழர்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கின்­றது. இன்று தமி­ழர்­கள் எதிர்­கொள்­கின்ற அவ­லங்­க­ளுக்­குச் சீரான தலை­மைத்­து­வம் இல்­லா­மையே கார­ண­மெ­ன­வும் அவர்­கள் சிந்­திக்க ஆரம்­பித்­து­ விட்­ட­னர்.

அர­சி­யல் தலை­வர்­கள்
தமது இனத்தை முறைப்படி
வழி­ந­டத்­திச் செல்ல வேண்­டும்

ஓர் ஆட்டு மந்­தைக் கூட்­டம் வழி தவ­றிச் சென்று ஆபத்­தில் சிக்­கா­மல் இருப்­ப­தற்­கும், ஒழுங்­கான மேய்ச்­ச­லைப் பெறு­வ­தற்­கும் அதை வழி­ந­டத்­திச் செல்­லக் கூடிய திற­மை­யான மேய்ப்­பன் ஒரு­வன் வேண்­டும். அவன் தவ­று­வி­டு­வா­னா­கில் அந்த மந்­தைக் கூட்­டம் வழி தவ­றிச் சென்று சின்­னா­பின்­ன­ மா­கி­வி­டும். இதைப் போன்று தான் ஓர் இனத்­துக்­கும் அதை வழி­ந­டத்­திச் செல்­லக் கூடிய தலை­வர் ஒரு­வர் அமைந்­தி­ருத்­தல் வேண்­டும். அத்­த­கைய தலை­வர் ஒரு­வர்­தான் தமி­ழர்­க­ளின் இன்­றைய தேவை­யா­க­வுள்­ளது.

தாம் தலைமை தாங்கி நடத்­திய புலி­கள் இயக்­கத்­தின் போரா­ளி­களை ஒழுக்­கம் நிறைந்­த­வர்­க­ளா­க­வும், கொள்­கைப்­பற்­றுள்­ள­வர்­க­ளா­க­வும், தமது உயிர்­களை ஈகம் செய்­யக் கூடிய அள­வுக்கு இனப்­பற்­றுள்­ள­வர்­க­ளா­க­வும் வளர்த்­தெ­டுத்­தார் பிர­பா­க­ரன். உல­கில் இருந்த போரா­ளிக் குழுக்­க­ளில் புலி­கள் இயக்­கம் முன்­னிலை வகித்­த­மைக்கு பிர­பா­க­ர­னின் சிறந்த தலை­மைத்­து­வமே கார­ண­மா­கும். ஒரு நாட்­டி­னுள்ளே இருந்­து­கொண்டு அந்த நாட்­டுப் படை­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டு­வ­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. ஆனால் துணி­வு­ட­னும், மதி­நுட்­பத்­து­ட­னும் இதைச் சாதித்­துக் காட்­டிய அதி­சய மனி­தர் அவர்.

போர் கார­ண­மாக அள­விட முடி­யாத துன்­பங்­களை மக்­கள் எதிர்­கொண்ட போதி­லும் புலி­கள் இரும்­புக்கு ஒப்­பான பாது­காப்பு அர­ணாக விளங்­கி­ய­தால் தீய சக்­தி­க­ளின் அச்­சு­றுத்­தல்­களை அவர்­கள் எதிர்­கொள்­ள­வில்லை. எந்­த­வித அச்­ச­மு­மின்றி தமது அன்­றா­டக் கட­மை­க­ளைக் கவ­னித்து வந்­த­னர். ஆனால் இன்று தமி­ழர் பகு­தி­க­ளில் என்ன நடக்­கின்­றது என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள்.

தமிழ்த் தலை­வர்­க­ளது
அண்­மைக்­கா­லச் செயற்­பா­டு­கள்
திருப்தி தரு­பவையாக அமை­ய­வில்லை
தமிழ்த் தலை­வர்­கள் தமது மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும், அவர்­கள் எதிர்­கொண்டு வரு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தற்­கா­க­வும் தீர்க்­க­த­ரி­ச­னத்­து­ட­னும், இரா­ஜ­தந்­தி­ரத்­து­ட­னும் நடந்து கொள்­ள­வில்லை என்­பது மக்­க­ளின் குற்­றச்­சாட்­டா­கும்.

இறு­திப் போர் ஓய்ந்து அமைதி நில­வு­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்ற நிலை­யி­லும் தமி­ழர்­க­ளின் அவ­லம் நீடிக்­கவே செய்­கின்­றது. அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காது இழு­ப­றி­யான நிலை காணப்­ப­டு­கின்­றது. இவற்­றுக்­குத் தீர்வு கிடைப்­ப­தற்­கான அறி­குறி எதை­யும் காண முடி­ய­வில்லை. தமி­ழர் தரப்­பின் தலை­மை­கள் இவை தொடர்­பாக ஆழ்ந்த கரி­சனை காட்­டு­வ­தைக் காண முடி­ய­ வில்லை. பத­வி­க­ளுக்­கா­கச் சண்­டை­யி­டு­வ­தி­லேயே அவர்­க­ளது காலம் கழிந்து வரு­கின்­றது. தமது பத­வி­க­ளைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தி­லும் அவர்­கள் அதிக அக்­கறை காட்டி வரு­கின்­ற­னர்.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் பத­விக்கு இப்­போதே போட்டி ஆரம்­பித்­து­விட்­டது. மாகா­ண­ச­பைத் தேர்­தல் இந்த ஆண்­டுக்­குள் இடம்­பெ­று­மென்ற எதிர்­பார்ப்பு நில­வு­வ­தால் இனி­மேல் அவர்­க­ளின் கவ­னம் அதி­லேயே ஆழ்ந்து கிடக்­கப் போகின்­றது. மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து அவர்­கள் தூர­வி­லகி விடு­வார்­கள் என்­ப­தைக் கூறத் தேவை­யில்லை.

எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யைப்
பயன்­ப­டுத்தி சம்­பந்­த­னால் எது­வும்
செய்ய முடிந்­த­தில்லை
தமி­ழர் ஒரு­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை வகிப்­பது தமி­ழர்­க­ளுக்­குப் பெருமை தரக் கூடி­ய­தெ­னக் கூறு­கின்­றோம்.
ஆனால் இந்­தப் பதவி தமி­ழர்­க­ளுக்­குக் கிடைத்­த­தால் கிடைத்த நன்­மை­கள் எவை­யென்­ப­தைப் பட்­டி­ய­லிட்­டுக் காட்ட முடி­யுமா? வெறும் பெருமை பேசிப் பேசியே காலத்­தைக் கழித்­த­வர்­கள் எமது முன்­னோர்­கள். அந்த இயல்பு இன்­ன­மும் எம்­ம­வர்­களை விடா­மல் தொற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றது.

இதை உத­றித் தள்­ளி­விட்டு இனி­யா­வது நாம் ஆக்­க­பூர்­வ­மா­கச் சிந்­திப்­ப­தற்­குப் பழ­கிக் கொள்ள வேண்­டும் அதைப் போன்று தமிழ் மக்­க­ளுக்­கென எதை­யும் செய்­யாது வீர­வ­ச­னங்­க­ளைப் பேசு­கின்­ற­வர்­க­ளும், தலை­வர்­க­ளெ­னக் கூறிக்­கொண்டு எம்­மத்­தி­யில் உல­விக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் பதவி என்று வந்­து­விட்­டால் இவர்­கள் அதைப் பெற்­றுக் கொள்­வ­தி­லேயே குறி­யாய் நிற்­கின்­ற­னர்.  இத்­த­கை­ய­வர்­க­ளால் தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வித விமோ­ச­ன­மும் கிடைக்­கப் பேவ­தில்லை.

இன்­றைய நிலை­யில் பத­வி­க­ளுக்கு மயங்­காத, துணி­வும் இரா­ஜ­தந்­தி­ர­மும் கொண்ட நேர்­மை­யான தலை­வர்­க­ளையே தமிழ் மக்­கள் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த விருப்­பம் நிறை­வே­றும்­போ­து­தான் அவர்­க­ளது துயர்­க­ளுக்­கும் விடிவு கிடைக்­கும்.

You might also like