திடீர் சுற்றிவளைப்பு- 26 பேர் கைது!!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பிரதேச சபை உறுப்பினர் உட்பட 26 பேர் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ, திஹாரி பிரதேசதத்தில் இராணுவத்தினர், அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

பொலிஸ் நாய் பிரிவும் இந்த சோதனை நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 26 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்தனகல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like