திருமணத்தை திடீரென நிறுத்திய நடிகை!!

விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது.

ராஷ்மிகா தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது. குறிப்பாக `இன்கெம் இன்கெம்’ என்ற பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் பாடல் வீடியோவில், காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close