தீக்காயங்களுடன் தம்பதி மருத்துவமனையில்!!

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன், மனைவி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து இருவரும் மீட்கப்பட்டனர்.

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like