தூத்துக்குடி உறவுகளுக்கு ஆறுதல் கூறி – நிதியுதவி வழங்கினார் நடிகர் ரஜினி!!

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவவர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இதனால் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதவிர, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற ரஜினி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும்(இந்திய), படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரூபாவும் (இந்திய) வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close