தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா!!

கடந்த 2014- ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா, இலட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதுத் கிடைத்தது.

இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். சித்தார்த் கதாப்பாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாப்பாத்திரத்தில் வருண் தேஜும் நடிக்க விருக்கின்றனர்.

இது அதர்வா தெலுங்கில் அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மேனன் கதாப்பாத்திரத்தில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி நடிக்கிறார். வால்மீகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்குகிறார்.

You might also like