side Add

தேசிய கால்­பந்­தாட்­டத்­தில் -ஹென்­றிஸ் சம்­பி­ய­னா­னது!!

இலங்­கைப் பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­திய சம­போச வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 14 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

நாவாந்­துறை சென். நீக்­கி­லஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணியை எதிர்த்து மணற்­காடு றோமன் கத்­தோ­லிக்­கப் பாட­சாலை அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளில் இரண்டு அணி­க­ளும் கோல்­கள் எதை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 3:2 என்ற கோல் கணக்­கில் சென். ஹென்­றிஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

You might also like