தேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை!!

குழந்­தை­க­ளுக்கு ஏதா­வது உடல்­நிலை சரி­யில்லை ­­என்­றால் பெற்­றார் பயப்­பட்டு மருத்­து­வ­ரி­டம் குழந்­தையை உட­ன­ட­டி­யா­கக் கொண்டு செல்­வது இயல்­பா­னதே. அதி­லும் மிகப் பொது­வான உடல்­நி­லைக்­கு­றை­பாடு காய்ச்­சல் என்­ப­தோ­கும். சில சம்­ப­வங்­க­ளில் காய்ச்­சல் தொடங்­கி­ய­வு­ட­னேயே பெற்­றோர் குழந்­தையை மருத்­து­வ­ரி­டம் அழைத்­துச் செல்­வதை அவ­தா­னிக்­க­லாம். அது நல்­லது தான். ஏனெ­னில் காய்ச்­ச­லுக்கு பல கார­ணங்­கள் உள்­ளன. அவற்றை கண்­ட­றிய வேண்­டும். ஆனால் எல்­லாச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் பிள்­ளைக்கு காய்ச்­சல் நிவா­ரணி மருந்­தைத் தவிர (பர­சிற்­ற­மோல்) வேறு மருந்­து­கள் தேவைப்­ப­டு­வ­தில்லை.

தேவை­யற்ற மருந்து
பெரும் ஆபத்தானவை
அனே­க­மான சந்­தர்ப்­பங்­க­ளில் பெற்­றோ­ரின் மன­தைச் சந்­த­தோ­சப்­ப­டுத்த அநா­வ­சி­ய­மான மருந்­து­கள் காய்ச்­சல் தொடங்­கிய முதல் நாளே காய்ச்­ச­லுக்­கான கார­ணம் அறி­யா­மல் வழங்­கப்­ப­டும் சந்­தர்ப்­பங்­க­ளும் உள்­ளன. எனவே எமக்­குக் காய்ச்­சல் என்ன என்­பது பற்­றிய சில தக­வல்­களை அறிந்து வைத்­தி­­­­ருப்­பது நல்­லது தானே.

முத­லில் காய்ச்­சல் என்­பதை மருத்­துவ ரீதி­யில் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­னால், வெப்­ப­நி­லை­யா­னது உடல் வெப்­ப­மா­னி­யில் அள­வி­டும் போது அது 100.4 பாகை பர­னைட் அல்­லது 38 பாகை செல்­சி­யசை விடக் கூடும் போதே குறிப்­பி ­டத்­தக்க காய்ச்­சல் உள்­ளது என­லாம். ஒரு­வ­ரது சாதா­ரண உடல் வெப்­ப­நி­லை­யா­னது 98.6 பாகை பர­னைட் அல்­லது 37 பாகை செல்­சி­யஸ் ஆகும். எனவே உடல் வெப்­ப­நிலை சாதா­ரண நிலையை விட அதி­க­ரிக்­கும் போது குழந்­தை­யின் உடல் வெப்­ப­­­­நி­லையை அடிக்­கடி சோதித்­துப் பார்ப்­பது நல்­லது.

காய்ச்­சல் என்­பது உட­லில் ஏற்­ப­டும் நோய்­க­­­­ளுக்கு எதி­ரான எமது உட­லில் ஏற்­ப­டும் எதிர்த்­தாக்­கத்­தின் விளை­­­­வே­ யா­கும். எனவே கடும் காய்ச்­சல் காணப்­ப­டும் போது நோயின் ததக்­கம் அதி­க­மா­க­வுள்­ளது எனத் தீர்­மா­­­­னிக்­க­ லாம்.

குழந்­தை­களை பொறுத்­த­வ­ரை­யில், புதி­தாய் பிறந்த குழச்­தை­க­ளுக்கு காய்ச்­சல் என்ன வெப்­ப­நி­லை­யில் இருந்­தா­லும் அதைப் பார­தூ­ர­மா­கக் கருதி உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்­குச் செல்ல வேண்­டும். அதே­போல் ஒரு மாதம் தொடக்­கம் மூன்று மாதம் வரை காய்ச்­சல் 38 பாகை செல்­சி­யஸ் (100.4 பாகை பனைட்) மூன்று மாதத்­திற்கு மேல் 39 பாகை செல்­­­­சி­யஸை (102.2 பாகை பர­னைட்) விட உடல் வெப்­ப­­­­­நிலை அதி­க­மா­யின் மிக முக்­கி­ய­மான நோய் ஏற்­பட்­டுள்­ளது என­லாம். வெப்­ப­நி­லை­யின் அள­­­­வைப்­போல் காய்ச்­சல் காணப்­ப­டும் கால­மும் முக்­கி­ய­­­­மா­ன­தா­கும். சாதா­ர­ண­­­­மாக ஏற்­ப­டும் வைரஸ் தொற்­றுக்­கள் 4 தொடக்­கம் 5 நாள்­க­ளில் மாறி­வி­டும். எனி­னும் டெங்கு காய்ச்­சல் அதி­க­மாக ஏற்­ப­டும் காலங்­க­ளில் இரண்டு நாள்­க­ளின் மேல் காய்ச்­சல் காணப்­ப­டு­மா­யின் குரு­திப் பரி­சோ­தனை செய்­தல் அவ­­­­சி­ய­மா­கும். ஒரு குழந்­தைக்கு நீண்ட நாள்­க­ளுக்கு (குறிப்­பாக 7 நாள்­க­ளுக்க ) மேல் காய்ச்­சல் காணப்­பட்­டால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்தே சிகிச்சை வழங்க வேண்­டும்.

குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டும்
காய்ச்­ச­லுக்­கான அறி­குறி
முன்­னர் கூறி­ய­வாறு காய்ச்­சல் என்­பது பல­வித நோய்­க­ளின் ஒரு அறி­கு­றி­யாக அமை­வ­தால் குழந்­தைக்கு பார­தூ­ர­மான நோய் உள்­ளது என்­பதை பின்­வ­ரும் ஏனைய அறி­கு­றி­கள் மூலம் தீர்­மா­னிக்க வேண்­டும்.
1. குறிப்­பி­டத்­தக்க அள­வில் உணவு உணவு உட்­கொள்­ளாமை அல்­லது பால­ருந்­தாமை.
2. பொது­வான உடல்­நிலை காணப்­ப­டாமை (சோர்வு, மயக்­கம்).
3. வெளி­றிய தோற்­றம் அல்­லது உட­லின் சாதா­ரண நிறத்­தில் மாற்­றம்.
4. கை, கால்­கள் குளிர்­வ­டைந்து காணப்­ப­டல்.
5. அதி­க­மான வாந்தி, வயிற்­றோட்­டம்.
6. சிறு­நீர் கழிக்­கும் அளவு குறை­வ­டை­த­லும், சிறு நீர் கழிக்­கும் போது எரிவு ஏற்­ப­ட­லும்.
7. மூச்­சுத் தின­றல், மூச்சு விட சிர­மப்­ப­டல்.
8. வலிப்பு ஏற்­ப­டல்.
9. உட­லில் அதி­க­மா­னக செம்­புள்­ளி­கள், கொப்­ப­ளங்­கள் அல்­லது கரு­நீல நிற தளும்­பு­கள் ஏற்­ப­டல்.
10.அவை­யத்தை அல்­லது மூட்டை அசைக்க முடி­யா­மை­யும் மூட்டு வீங்­கு­த­லும்.
11. கடு­மை­யான வறிற்று வலி.
12. கடு­மை­யான தலை­யி­டி­யும், வாந்­தி­யும்.
13. குரு­தி­யாக வாந்தி எடுத்­தல், குருதி கலந்த மலங்­க­ழித்­தல் அல்­லது முர­சால் மூக்­கால் குரு­திக் கசிவு, மேற்­கூ­றிய அறி­கு­றி­கள் காணப்­ப­டின் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் குழந்­தையை கொண்டு செல்ல வேண்­டும்.

காய்ச்­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த நாம் உட­னடி நிவா­ர­ணி­ யாக பர­சிற்­ற­மோல் எனும் மருந்­தையே சாதா­ர­ண­மா­கப் பாவிக்­கின்­றோம். குழந்­தை­க­ளைப் பொறுத்­த­வரை நிறைக்­கேற்ப சரி­யான அள­வில் பாவிக்க வேண்­டும். அதி­க­ள­வில் பர­சிற்­ற­மோல் மருந்தை குழந்­தை­கள் உட்­கொண்டு ஈரல் பழு­த­டைந்து பார­தூ­ர­மான விளை­வு­கள் ஏற்­ப­டு­வதை இப்­போ­தும் நாம் காண்­கி­றோம். மேலும் டெங்கு காய்ச்­ச­லும் காணப்­ப­டு­வ­தால் பரி­ப­ர­சிற்­ற­மோல் தவிர ஏனைய காய்ச்­சல் நிவா­ரண மருந்­து­களை பாவிப்­பது நல்­ல­தல்ல.சில சம­யங்­க­ளில் காய்ச்­சலை குறைக்க அறை வெப்­ப­நி­லை­யி­லுள்ள நீரால் நனைந்த துணி­யால் உடம்­பைத் துடைக்­க­லாம்.

எனி­னும் குழந்­தை ­க­ளுக்கு இந்த முறை­யா­னது காய்ச்­ச­லைக் குறைப்­ப­தை­யும் விட அசௌ­க­ரி­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் எனவே காய்ச்­ச­லுக்­கன சரி­யான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து அதற்­கான உரிய சிகிச்­சையை வழங்க வேண்­டும்.

இறு­தி­யாக குறைந்­த­பட்­சம் எமக்கு தெரிந்­தி­ருக்க வேண்­டிய விட­யம் காய்ச்­சல் குழந்­தை­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற வேளை­யில் அது கடும் காய்ச்­ச­லாக இல்­லா­த­வி­டத்­தில் அதாவது சாதா­ரண உடல்­நிலை காணப்­ப­டு­மா­யின் அல்­லது சாதா­ரண துடி­யாட்­டம் தொழிற்­பாடு காணப்­ப­டு­மா­யின் அதி­கம் நாம் பயப்­பட வேண்­டி­ய­தில்லை. ஆனால் முன்­னர் கூறிய ஆபத்­தான அறி­கு­றி­கள் காணப்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல வேண்­டும்

குழந்­தை­நல மருத்­துவ நிபு­ணர்
யாழ்ப்­பா­ணம் போதனா
மருத்­து­வ­மனை.

You might also like