தொடருந்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து, புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட இளைஞனை மோதித் தள்ளியது.

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like