நடிகர் பரத்துக்கு -இரட்டைக் குழந்தைகள்!!

நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தைகள் அண்மையில் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பரத்.

பாய்ஸ், காதல், வெயில், நேபாளி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பரத். கடந்த 2013-ம் ஆண்டு டுபாயைச் சேர்ந்த ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை தனது கீச்சகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பரத்.

“இரட்டை சந்தோஷம், இரண்டு பெறுமதியான ஆண் குழந்தைகள், தாயும் சேயும் நலம். உங்கள் அன்புக்கு நன்றி” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார் பரத்.

பரத்துக்கு அவரது ரசிகர்களும், நணபர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close