நிலமை மேலும் மோச­ம­டை­யும்

281

கொழும்­பில் குழப்­ப­ம­டைந்த அர­சி­யல் நில­வ­ரங்­கள் அடுத்த வாரத்­தி­லும் தெளி­வ­தற்­கான அறி­கு­றி­கள் எவை­யும் தெரி­ய­வில்லை. அரச தலை­வ­ருக்­கும் நாடா­ளு­மன்­றத்­துக்­கும் இடை­யி­லான நேரடி மோத­லைத் தவிர்க்­கும் விதத்­தில் நாடா­ளு­மன்­றத்தை நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி கூட்­டு­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரி­ய­வி­டம் உறு­தி­ய­ளித்­த­போ­தும் அதற்­கான அர­சி­தழ் (வர்த்­த­மானி) அறி­விப்பு இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­ப­தால் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் கூடுமா என்­கிற சந்­தே­கம் தொடர்­கின்­றது. அரச தலை­வர் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­ட­வில்லை என்­றால் அவரை எதிர்த்து நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டு­வது என்­பதே பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­க­ளின் முடி­வாக உள்­ளது என்­ப­தால் அடுத்த வார­மும் அர­சி­யல் குழப்­பம் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யங்­களே அதி­கம் இருக்­கின்­றன.
மகிந்த ராஜ­பக்­சவை புதிய தலைமை அமைச்­ச­ராக நிய­மித்த கையோடு நாடா­ளு­மன்­றத்­தை­யும் 16ஆம் திகதி வரைக்­கும் ஒத்தி வைத்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. இது மக்­க­ளாட்­சிக்கு மாறான செயற்­பாடு என்று கூறும் ஐக்­கிய தேசிய முன்­னணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­ப­வற்­றின் தலை­வர்­கள் கூடி நாடா­ளு­மன்­றத்தை கார்த்­திகை 2ஆம் திக­தியே கூட்­ட­வேண்­டும் என்று சபா­நா­ய­க­ரி­டம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்­கள்.

எனி­னும் அரச தலை­வ­ரு­டன் முரண்­ப­டாத வகை­யில் ஒரு சுமூக நில­மையை ஏற்­ப­டுத்­தும் வித­மாக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் சபா­நா­ய­கர் இது குறித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். இத­னால், கார்த்­திகை 5ஆம் நாள் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டு­வது என்று இரு தரப்­பி­ன­ரும் இணங்­கி­யி­ருந்­த­னர். அதற்­கான அர­சி­தழ் அறி­விப்பை அரச தலை­வர் விடுப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் அது வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்து கார்த்­திகை 7ஆம் நாள் நாடா­ளு­மன்றம் கூட்­டப்­ப­டும் என்று அரச தலை­வர் பக்­கம் இருந்து தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பும் இது­வ­ரை­யில் வெளி­யா­க­வில்லை.

நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த ஆட்­சிக்­கான பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தில் ஏற்­பட்­டுள்ள இடர்­பாடே இதற்­கான கார­ணம் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் உய்த்­து­ண­ரப்­ப­டு­கின்­றது. நேற்று மாலை வரை­யான நில­வ­ரத்­தில் மகிந்த தரப்­புக்கு 104 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் தரப்­புக்கு 112 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வுமே இருந்­தது. ஜே.வி.பி. உறுப்­பி­னர்­கள் மற்­றும் ஐ.தே.கவின் அத்­து­ர­லிய ரத்ன தேரர் ஆகி­யோர் நடு­நிலை வகிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­னர். இந்த நிலை­யில் யாருக்­கும் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கக்­கூ­டிய நிலமை இப்­போ­தைக்கு இல்லை.

ஐ.தே.க. பக்­கம் இருந்து குறைந்­தது இன்­னும் 9 பேரை­யா­வது தம் பக்­கம் இழுத்­தால் மட்­டுமே மகிந்த தரப்­பி­ன­ரால் வெல்ல முடி­யும் என்­பதே இது­வ­ரை­யில் நில­வ­ரம். அதற்­கான பேரங்­கள் இன்­ன­மும் படிந்து வரா­மை­யா­லேயே நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டு­வ­தற்­கான அறி­விப்பை அரச தலை­வர் இன்­ன­மும் விடுக்­க­வில்லை என்று தெரி­கி­றது.
நிலமை இப்­ப­டியே சென்­றால் நாடா­ளு­மன்­றத்தை எப்­ப­டி­யும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி கூட்டி அன்­றைய தினமே மகிந்த மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது என்­பது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் திட்­டம். அப்­படி நடந்­தால் அது அரச தலை­வ­ருக்கு பெரும் அவ­மா­ன­மா­க­வும் தோல்­வி­யா­க­வும் முடி­யும். இத­னால், அவர் முன்­னரே கூறி­ய­தைப் போன்று பதவி வில­கும் நில­மை­யும் ஏற்­ப­ட­லாம்.

அதே­நே­ரத்­தில் ஐ.தே.கவும் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கத் தவ­றும்­பட்­சத்­தில் நாடு மேலும் உறு­தி­யற்ற நில­மைக்­குள் தள்­ளப்­ப­டும். நில­மை­கள் மேலும் மோச­ம­டை­யும். இது பல குழப்­பங்­க­ளுக்கு வழி­வ­குப்­ப­தாக இருக்­கும்.

You might also like