நீர்த் தாங்கியிலிருந்து வெடிபொருள்கள் மீட்பு!!

வீடொன்றின் கூரையின் நீர்த் தாங்கியிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீட்டில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் வெடிபொருள்களைக் கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட கைக்குண்டு ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கவைக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like