நேர்கொண்ட பார்வை- ட்ரைலர் வெளியீடு!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம் பிங்க். இத்திரைப்படம் நேர்கொண்ட பார்வையென தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தயாரிப்பில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். யுவன் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

போனிகபூரின் முதல் தமிழ்த் தயாரிப்பான நேர்கொண்ட பார்வையில் இந்தியில் பிங்க் திரைப்படத்தில் அமிதாப் ஏற்றிருந்த, ரசிகர்களாலும் – திரைப்பட விமர்சகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தை நடிகர் அஜித் குமார் ஏற்று நடித்துள்ளார். மேலும், நடிகை வித்யாபாலன், ஆண்ட்ரியா தாரங், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட திரைப்படம் தொடர்பான அறிவிப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், நடிகர் அஜித் ஏற்று நடிக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரம் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகுமென முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

You might also like