பங்­கா­ளிக் கட்­சி­கள் எதி­ரி­க­ளாக பார்க்­கின்­றன

அமைச்­சர் ரவூப் ஹக்­கீம் தெரி­விப்பு

அர­சில் அங்­கம் வகிக்­கும் பங்­கா­ளிக் கட்­சி­கள் இன்று எங்­களை கிழக்­கில் மிகப்­பெ­ரிய எதி­ரி­க­ளாக பார்க்­கின்­றன. என்று ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­தார்.

கட்­சி­யின் அட்­டா­ளைச்­சேனை மத்­திய குழு­வு­ட­னான சந்­திப்பு நேற்­று­முன்­தி­னம் ஆலங்­கு­ளம் பிர­தே­சத்­தில் நடை­பெற்­ற­போது, அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அமைச்­சர், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து முதற் தட­வை­யாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லில் போட்­டி­யிட்­டோம்.

இதன்­மூ­லம் அழிந்­து­போ­யி­ருக்­கின்ற ஒரு கட்­சிக்கு உயி­ரூட்­டு­கின்ற ஒரு வேலையை பார்த்­து­விட்­டோமா என்று சிந்­திக்­கத் தூண்­டு­கி­றது. அது மாத்­தி­ர­மின்றி அழிந்து போயி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இன்­றும் தலை­தூக்கி ஆடிக்­கொண்­டி­ருக்­கி­றது.

நாங்­கள் ஆட்­சி­ய­மைக்­கக்­கூ­டிய சபை­க­ளில், எங்­க­ளது எதி­ரி­க­ளுக்கு ஆட்­சியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தில் சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ஆர்­வத்­து­டன் செயற்­பட்டு சில இடங்­க­ளில் தங்­க­ளது கைவ­ரி­சை­யை­யும் காட்­டி­யுள்­ள­னர்.

கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்­கள் குறித்து நாம் அலட்­டிக்­கொள்­ளத் தேவை­யில்லை. அவர்­கள் இந்­தப் பகு­தி­க­ளில் மூக்கு நுழைப்­ப­தற்கு வர­வில்லை. ஆனால், அர­சாங்­கத்­தில் இருக்­கின்ற பங்­கா­ளிக் கட்­சி­கள்­தான் இன்று எங்­க­ளுக்கு பெரிய வில்­லங்­க­மாக மாறி­யி­ருக்­கின்­ற­னர் – என்­றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close