பசிக்கும் போது மட்டும் புசிப்போம்!!

0 87

பசி­யாத போது புசி­யாதே என்­கி­றார்­கள். உண்­மை­தான். நல்ல பசி­யோடு உண்­ணும்­போ­து­தான், உண­வின் அருமை தெரி­கின்­றது. உண­வின் சுவை தெரி­கின்­றது. ஓர் உழைப்­பா­ளிக்கு என்­றுமே நல்ல பசி­யி­ருக்­கும். கடின உழைப்­பால் நல்ல பசி­யெ­டுக்­கும். ஆற அமர்ந்து, உள்ள உணவை இரசித்துச் சுவைத்­துச் சாப்­பிட முடி­யும்.

பசி– ஆரோக்கியத்தின் அடையாளம்
சாப்­பிட்­ட­தும் பசி அடங்­கி­வி­டும். ஆனால் சாப்­பி­டு­வ­தற்கு முன்பே பசி அடங்­கி­விட்­டால்? அங்­கே­தான் பிரச்சினையே. அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­ல­ள­விலோ அல்லது மன­த­ள­விலோ ஏதோ ஒரு நோய் இருக்­கி­றது என்று உறு­தி­யா­கச் சொல்­ல­லாம். அல்­லது நோய்க்­கான அறி­கு­றி­யா­கக் கூட அதை எடுத்­துக் கொள்­ள­லாம். மனி­தன் ஓடி ஓடி உழைப்­பது தன் பசியைப் போக்­கத்­தான்! நல்ல பசி எடுத்து உண்­ப­வன் மட்­டுமே ஆரோக்­கிய மனி­தன்! ஆரோக்­கி­யத்துக்கு அடை­யா­ளம் பசி! ஆரோக்­கி­யத்துக்கு அடை­யா­ளம் பசி ! நீண்ட நாள் வாழ­வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­ப­வர்­கள் பசி எடுக்­கா­மல் சாப்­பி­டவே கூடாது.

மாறாகப் பணக்­கார வர்க்­கத்­தி­ன­ருக்குத் தேவைக்கு அதி­க­மாக எல்­லாமே இருப்­ப­தால் உண­வின் பெறு­ம­தியை இவர்­க­ளால் அறிந்து கொள்ள முடி­வ­தில்லை. பசி என்­றால் என்­ன­வென்று தெரி­யாது வளர்­ப­வர்­கள் இவர்­கள். பசிக்­கும்­போத இவர்­கள் உண்­ப­தில்லை. உண்­ணும்­போது இவர்­க­ளுக்­குப் பசிப்­ப­து­மில்லை.

குழந்­தை­கள், பதின்­ம­வ­ய­துப் பிள்­ளை­கள், ஏன் பெரி­ய­வர்­கள் கூட அடிக்­கடி, “பசிக்­கவே இல்லை. சாப்­பாடு வேண்­டாம்’ என்று அடம்­பி­டிப்­பது வாடிக்கை. ஆனால் அது மேலோட்­ட­மான விடயம் அல்ல. இதில் இரண்டு வகை உண்டு.

வகைப்பாடு– உணவு உண்ணல்
முதல் வகை: சிலர் அதிக மகிழ்ச்­சி­யில் இருப்­பார்­கள். ஏதோ ஒன்றை எதிர்­பார்த்து இருப்­பார்­கள். ஏதா­வது ஒரு வேலை­யில் அதிக ஆர்­வம் உடை­ய­வர்­க­ளாக இருப்­பார்­கள். எதை­யா­வது சிந்­தித்­துக் கொண்டே இருப்­பார்­கள். தூக்­கத்தை இழந்­தி­ருப்­பார்­கள். இது­போன்ற கார­ணங்­க­ளுக்­காக சில­ருக்கு அந்தச் சம­யம் பசியே எடுக்­காது. சாப்­பி­டத் தோன்­றாது. இந்தப் பசி­யின்மை சில மணி நேரங்­க­ளில் தானா­கவே சரி­யா­கி­வி­டும். இத­னால் உட­லுக்கு எந்­தத் தீங்­கும் இருக்­காது. உட­லும் களைப்பு அடை­யாது.

இரண்­டா­வது வகை: சிலர் ஏதோ ஒரு­வ­கை­யில் அதீத பயத்­து­ட­னேயே இருப்­பார்­கள். அள­வுக்கு அதி­க­மாகக் கவ­லைப்­ப­டு­வார்­கள். எப்­போ­தும் மன­வ­ருத்­தத்­தி­லேயே இருப்­பார்­கள். இவர்­க­ளுக்­குப் பசியே எடுக்­காது. இன்­னும் சில­ருக்கு மஞ்­சள் காமாலை, புற்­று­நோய், காய்ச்­சல் இருந்­தால் பசி எடுக்­காது. இந்­தப் பசி­யின்மை தானா­கச் சரி­யா­காது. உடலை வருத்தி, சோர்­வ­டை­யச் செய்து விடும். உடல் மெலி­யத் தொடங்­கி­வி­டும். இந்த வகையான பசி­யின்­மை­தான் கவ­னிக்க வேண்­டி­ய­தா­கும்.

சுவையாக உண­வு­க­ளைக்­கூட சாப்­பிட விடா­மல் செய்­யும் பிரச்­சி­னை­தான் `பசி­யின்மை’. இதற்குப் பல்­வேறு கார­ணங்­கள் உண்டு. பசியை அதி­க­ரித்து, உண­வு­களை விரும்பிச் சாப்­பிட நீங்­கள் உண­வுப் பழக்­கத்­தில் கடை­பி­டிக்க வேண்­டிய விடயங்­களை நோக்குவோம்.

நல்ல உடல் நலத்­துக்கு 40-க்கு மேற்­பட்ட ஊட்­டச் சத்­துக்­கள் அவ­சி­யம். எனவே உங்­கள் உணவு தின­மும் ஒரே வகை­யா­ன­தா­கவோ, ஒரு வேளை­யில் ஒரே உணவு மட்­டுமோ இருக்­கக்­கூ­டாது. தின­சரி உண­வு­டன் கூடு­த­லாகப் பழங்­கள், காய்­க­றி­கள், பாற்­பொ­ருள்கள் மற்­றும் இறைச்சி, மீன் மற்­றும் பிற தானிய உண­வு­கள் இவை­க­ளில் ஏதா­வது ஒன்­றி­ரண்டை கூடு­த­லாகச் சேர்த்து சாப்­பி­டுங்­கள்.

சமைக்­கும் உணவு சுவை­யாக இருந்­தால்­தான் நம்­மால் விரும்பி சாப்­பிட முடி­யும். எனவே வழக்­க­மான காய்­க­றி­க­ளா­னா­லும் கொஞ்­சம் வித்­தி­யா­ச­மான தயா­ரிப்பு முறை­யில் சமைத்துச் சாப்­பி­டுங்­கள். சமை­யல்ப் புத்­த­கங்­கள் அல்­லது வித­வி­த­மாகச் சமைக்­கும் அனு­ப­வ­முள்­ள­வ­ரின் உத­வியை நாடுங்­கள்.

உங்­கள் எடை சரி­யா­னதா என்­பது பாலி­னம், உய­ரம், வயது மற்­றும் பாரம்­ப­ரி­யம் உட்­பட பல விடயங்­களை சார்ந்­தி­ருக்­கி­றது. உடல் எடை அதி­க­மாக இருந்­தா­லும், குறை­வாக இருந்­தா­லும் பல வியா­தி­கள் ஏற்­ப­டும். சரா­ச­ரி­யான உடல் எடையை மேலாண்மை செய்­வது உடல் நலத்­திற்­கும், உணவுப் பழக்க வழக்­கத்துக்கும் நல்­லது. உடல் ஆரோக்­கி­ய­மாக இருக்க மித­மான அள­வில் உணவு சாப்­பி­டு­வதை வழக்­க­
மா­கக் கொள்ள வேண்­டும்.

அள­வாகச் சாப்­பி­டு­வ­து­தான் சரி­யான நேரத்துக்கு பசி­யைத் தூண்­டும். உங்­க­ளுக்­குப் பிடித்த உணவை கூடு­த­லாக சாப்­பி­டு­வ­தும், மற்ற உண­வு­களை தேவையை விடக் குறை­வாக எடுத்துக் கொள்­வ­தும் உட­லுக்குத் தீங்கு தரும். இது பசி­யின்­மை­யை­யும், உண­வின் மீது வெறுப்­பை­யும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.
© சில­ருக்குப் புதுப்­புது உண­வு­களை சுவைத்­துப் பார்ப்­பது பிடிக்­கும். அடிக்­கடி புதிய உண­வு­களைச் சேர்த்­தால் சமிபாட்டுக்கான கால நேரம் மாறு­ப­டு­வ­தால் பசிப்­ப­தில் பிரச்­சி­னை­கள் வர­லாம். வழக்­க­மான உண­வு­களை சுழற்சி முறை­யில் சாப்­பி­டு­வது எளிதான உணவு சமிபாட்டுக்கு வழி­வ­குக்­கும். வழக்­க­மான நேரத்துக்குப் பசி­யை­யும் தூண்­டும்.

பசி­பற்றி எழு­தும்­போது, இந்­தப் பசி­யால் வாடு­ப­வர்­கள் பற்­றிய புள்ளி விவரங்­களை இணைப்­பது சாலப்­பொ­ருத்­த­மாக இருக்­க­லாம்.
© சேர்க்க வேண்­டிய உண­வு­களைச் சேர்ப்­ப­தும், தவிர்க்க வேண்­டிய உண­வு­களைத் தவிர்ப்­ப­தும் சிறப்­பான உண­வுப் பழக்­க­மா­கும். உடல் நலத்­தில் அக்­கறை காட்­டும் பல­ரும் அதிக ஊட்­டச்­சத்­துள்ள உணவை விரும்பிச் சாப்­பி­டு­கி­றார்­கள். ஒவ்­வொ­ரு­வர் உட­லுக்­கும் தேவை­யான சத்­துக்­கள் மாறு­ப­டும். எனவே உணவு ஆலோ­ச­க­ரின் பரிந்­து­ரைப்­படி சத்­தான உண­வு­களைச் சேர்க்­க­வும், அவ­சி­ய­மற்ற நொறுக்­குத் தீனி போன்ற உண­வு­களை குறைக்­க­வும், தவிர்க்­க­வும் செய்­யுங்­கள்.

எல்லா உண­வு­க­ளும் அவ­சி­ய­மா­ன­தும், சத்­தா­ன­தும் அல்ல. ஒரு­முறை கொழுப்பு, உப்பு மற்­றும் சர்க்­கரை நிறைந்த உண­வு­களை நீங்­கள் உட்­கொண்­டால், மறு­முறை அந்தச் சத்­துக்­கள் குறை­வாக உள்ள உணவை உண்ண வேண்­டும். அதே­போல ஒரு சத்­தான உணவைத் தவிர்க்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டால் அடுத்த முறை அந்த உணவை அவ­சி­யம் சேர்த்­துக் கொள்­ளுங்­கள். நீங்­கள் சாப்­பி­டும் உண­வு­கள் நீண்ட காலத்துக்கு உங்­கள் ஆரோக்­கி­யத்­திற்­கும் பக்க பல­மாக இருக்க வேண்­டு­மல்­லவா!

பசிப்பிணியின் தாக்கம்
இந்த ஆண்டு கிடைத்­துள்ள குளோ­பல் பசி அட்­ட­வ­ணையைச் சற்றே நோக்­கு­வோம். 119 நாடு­களை ஒப்­பீடு செய்­த­தில் யேம­னின் இடம் 117. அச்­ச­மூட்­டும்­அ­ள­வில் பசி, பட்­டி­னி­யின் கொடுமை சார்ந்து ஆபி­ரிக்க நாடான சூடான் 112ஆவது இடத்­தில் நிற்­கின்­றது.இவர்­கள் நிலை­யும் அச்­ச­மூட்­டு­வதே! 109ஆவது இடத்­தைப் பிடிக்­கும் வட­கொ­ரி­யா­வும் பசி­யால் வாடு­கின்ற, அச்­ச­மான நிலை­யில்­தான் காணப்­ப­டு­கின்­றது. 111ஆம் இடத்­தி­லுள்ள ஆப்­கா­னிஸ்­தான் நிலை­யும் அச்­ச­மூட்­டும் ஒன்­று­தான்! பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், இந்­தியா போன்ற நாடு­கள்­கூட மோச­மான நிலை­யில்­தான் இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்­கள். நமது நாட்­டில் அந்த அள­வுக்கு நிலைமை மோச­மில்லை என்­கி­றது இவர்­கள் புள்ளி விப­ரங்­கள்.

உலக நாடு­கள் 3.3 பில்­லி­யன் தொன் உணவை ஆண்­டுக்கு ஆண்டு உற்­பத்தி செய்­வ­தா­க­வும், அதில்1.3 பில்­லி­யன் தொன் உண்­ணப்­ப­டா­மல் கழி­வா­கவே போய்­வி­டு­கின்­றது என்­ப­தும் மகா அதிர்ச்­சி­யான விட­யங்­கள். இப்­ப­டி­யொரு நிலை­யில் 825 மில்­லி­யன் தொகை­யி­னர் பசித்த வயி­றோடு படுக்­கைக்கு போகி­றார்­கள். 3.1 மில்­லி­யன் சிறார்­கள் சத்­து­ண­வுப் பற்­றாக் குறை­யா­லும், பசி பட்­டி­னி­யா­லும் ஆண்­டுக்கு ஆண்டு வாடு­கி­றார்­கள். என்று மாறும் இந்­தக் கோலம்?

பசிக்க வேண்­டும்-­! உ­ண­வைச் சுவைக்க மாத்­தி­ர­மல்ல, வாழ்க்­கை­யைச் சுவைக்­க­வும் பசிக்க வேண்­டும்.

You might also like