பன்னாட்டு தென்னை விழா சாவகச்சேரியில் ஆரம்பம்

பன்னாட்டு தென்னை தின விழா சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

நகர சபையின் மரம் நடுகைத் திட்டத்தின் கீழ் யாழ். பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபையுடன் இணைந்து இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

தென்னை அபிவிருத்தி அலுவலகர் ஜே.சத்தியேந்திரா தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்வில், தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் யாழ்.பிராந்திய முகாமையாளர் தெ.வைகுந்தன் , பண்ணைத் திட்டமிடல் அலுவலர் சி.சற்குணன், நகரசபைக் கணக்காளர் சி.பரதன் , நிர்வாக அலுவலர், தென்மராட்சி பிரதேச தென்னை அபிவிருத்தி அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like