பலசரக்குக் கடையில் தீ- பல லட்சம் பொருள்கள் சேதம்!!

மன்னார் தலைமன்னார் பியரில் உள்ள பலசரக்குக் கடையில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடை எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை.

கட்டடம் உட்பட பொருள்களுடன் 14 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like