பளை பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை!!

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனையும், அணிவகுப்பு மரியாதையும் இன்று நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்க அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு புதிதாக அவர் பதவியேற்றுக் கொண்டதால், அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆவணங்கள் பரிசீலனை, பொலிஸாரின் வாகனங்கள் சோதனை இடம்பெற்றன.

You might also like