side Add

பள்ளக்கோட்டையில் விபத்து- ஒருவர் படுகாயம்!!

பேருந்தும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து மன்னார் பள்ளங்கோட்டையில் இன்று காலை நடந்துள்ளது.

நானாட்டான் மடுக்கரை கிராமத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்துடன், எதிரே வந்த உந்துருளி நேருக்கு நேர் மோதியதில் விபத்து நடந்துள்ளது.

உந்துருளியில் பயணித்தவர் படுகாயங்களுடன் வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like