side Add

பழிவாங்கும் மனோ பாவத்தை- மகிந்த தரப்ப கைவிட வேண்டும்!!

கூட்­ட­மைப்­பைப் பழி­வாங்­கும் வகை­யில் மகிந்த தரப்­பி­னர் செயற்­ப­டு­வ­தற்­கான சூழ்­நி­லை­கள் உரு­வா­கி­யுள்­ள­தையே அண்­மைய அர­சி­யல் கள நில­வ­ரங்­கள் சுட்டி நிற்­கின்­றன. ஏனெ­னில் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்த போதும், அந்­தப் பத­வி­யில் அவ­ரால் தொடர்ந்­தும் நீடித்­தி­ருக்க முடி­ய­வில்லை என்­ப­தும், அவரை அந்­தப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளில் கூட்­ட­மைப்­பி­ன­ரின் பங்கு அளப்­ப­ரி­யது என்­ப­தும் மகிந்த கொண்­டுள்ள கோபத்துக்குக் கார­ண­மாக அமைந்­து­விட்­டன.தவிர இந்த விட­யங்­கள் அவ­ரைச் சார்ந்­துள்­ளோர் மத்­தி­யி­லும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

குறிப்­பாக, அரச தலை­வ­ரால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­யல் குழப்­பங்­கள் கார­ண­மாக நாட்­டில் பெரும் குழப்ப நிலை­யொன்று காணப்­பட்­ட­தும், இறு­தி­யில் கூட்­ட­மைப்பு வழங்­கிய ஆத­ரவு கார­ண­மாக ரணில்­விக்­கி­ர­ம­சிங்க தலைமை அமைச்­சர் பத­வி­யில் தொடர முடிந்­த­தும் யாவ­ரும் அறிந்த விட­யம். இதுவே மகிந்த தரப்­பி­னர் கொதித்து எழு­வ­தற்­கு­ரிய மூல கார­ண­மாக அமைந்­து­விட்­டது என­லாம்.

பதவி மோகத்­தில்
மூழ்­கி­யுள்ள மகிந்த தரப்பு!
தற்­போது தலைமை அமைச்­சர் பத­வியை விட­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி மேலா­னது என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி ­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் கூறும் அள­வுக்கு நிலமை மாற்­றங்­கண்­டுள்­ளது. தமி­ழர் ஒரு­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் நீடிப்­பதை இன­வா­தி­க­ளால் சிறி­தும் பொறுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. அந்­தப் பத­வியை சம்­பந்­த­னி­ட­மி­ருந்து எந்த வகை­யி­லா­வது பறித்­தெ­டுக்க வேண்­டும் என்­ப­தில் மகிந்த தரப்­பி­னர் தங்­க­ளு­டைய கழு­குப் பார்­வை­யைச் செலுத்தி வந்­த­னர். தற்­போது அதற்­கான வாய்ப்­புக் கிட்­டி­ யுள்­ளது.

உண்­மை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யைக் கொண்டு சம்­பந்­த­னால் எதைச் சாதிக்க முடிந்­தது என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பறித்து விடு­வ­தால் மகிந்த தரப்­புக்கு என்ன நன்மை கிடைத்­து­வி­டப் போகின்­றது என்­ப­தை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். அதை­வி­ட­வும் நாட்­டின் மிக உயர்ந்த பத­வியை வகித்த ஒரு­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

அர­சி­யல் குழப்­பங்­களை
நீடிக்­கவே மகிந்த தரப்பு விரும்­பு­கி­றது
மகிந்த ராஜ­பக்ச ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி ­யி­லி­ருந்து வில­கிச் சென்று புதிய கட்­சி­யொன்றை அமைத்து அந்­தக் கட்­சி­யின் சின்­னத்­தி­லேயே உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட்­டி­ருந்­தார். இந்­த­நி­லை­யிலே இன்­ன­மும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லேயே அவர் நீடிப்­ப­தா­க­வும், புதிய கட்­சி­யில் அவர் இணைந்­து­கொள்­ள­வில்­லை­யெ­ன­வும் அவர் சார்­பில் கூறப்­ப­டு­ வதை ஏற்­றுக்­கொள்­வ­தில் என்ன நியா­யம் இருக்­கி­றது என்ற கேள்வி இயல்­பா­கவே எழுந்து மறை­கி­றது.

இவ்­வி­தம் நாட்­டைக் குழப்­பு­கின்ற தவ­றான செயற்­பா­டு­க­ளில் மகிந்த தரப்­பி­னர் தொடர்ந்­தும் ஈடு­பட்டு வரு­வது அர­சி­யல் நாக­ரீ­கத்­துக்கு புறம்­பான நடத்­தை­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. சில­வேளை இந்த விட­யத்­தி­லும் மகிந்த தோல்வி காண்­பா­ரா­கில், அவ­ரது அர­சி­யல் எதிர்­கா­லம் என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே மாறி­வி­டும்.இதை­விட கூட்­ட­மைப்­பின் மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இரட்­டைக் குடி­யு­ரி­ மை­யைக் கொண்­டுள்­ள­தா­க­வும், அவர்­க­ளது நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யைப் பறிப்­ப­தற்­கான செயற்­பா­டு­கள் அடுத்த ஆண்­டில் இடம்­பெ­று­மெ­ன­வும் மகிந்த தரப்­பி­னர் செய்­தி­யொன்­றைக் கசிய விட்­டுள்­ள­னர். ஏற்­க­னவே இரட்­டைக் குடி­யு­ரி­மை­யைக் கொண்­டி­ ருந்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சார்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தமது பத­வியை இழந்­தமை அனை­வ­ரும் அறிந்த விட­ய­மா­கும்.

இரட்­டைக் குடி­யு­ரிமை
விவ­கா­ரம் குறித்த
தெளிவு வேண்­டும்!
இந்த விட­யம் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலைமை உண்மை நிலை­யைத் தெளி­வு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­ன­தொன்­றா­கும். மகிந்த தரப்பு இதற்­கான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் உள்­ள­தா­க­வும், இது தொடர்­பில் நீதி­மன்­றத்­தின் உத­வியை நாடப்­போ­வ­தா­க­வும் கூறி­யுள்­ள­தால், இந்­தக் குற்­றச்சாட்­டு­கள் குறித்து தாம­த­மின்­றிப் பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பா­டும் கூட்­ட­மைப்­பின் தலை­மைக்கு உண்டு.

தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளைப் புரிந்­து­கொள்­ளாத தலைமை
கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் தமி­ழர்­க­ளின் வாக்­கு­களே மகிந்த தோல்லி அடை­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­துள்­ளதை மறந்து விட­லா­காது. இறு­திப் போரின்­போது தாம் அனு­ப­வித்த அவ­லங்­களை தமிழ் மக்­கள் இன்­ன­மும் மறந்­து­வி­ட­வில்லை. அந்­த­வே­ளை­யில் தெற்­கி­லி­ருந்து ஒரு­வர்­கூடப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அனு­தா­பம் தெரி­விக்­க­வில்லை. இதற்கு மாறாக போர் வெற்­றிக் கொண்­டாட்­டங்­கள் பரந்த அள­வில் இடம்­பெற்­றன. மகிந்த ஒரு­போர் வெற்றி வீர­ராக மக்­கள் மத்­தி­யில் வலம்­வந்து கொண்­டி­ருந்­தார். வடக்­கில் அழு­கைக் குரல்­கள் வானை முட்­டும் அள­வுக்கு எழுந்த நிலை­யில், தெற்­கில் மகி­ழச்சியை வெளிப்­ப­டுத்­து­கின்ற வகை­யில் குரல்­கள் கேட்­டுக் கொண்­டே­யி­ருந்­தன. இந்த நாட்­டில் இனங்­க­ளுக்­கி­டையே நில­வி­வ­ரு­கின்ற நல்­லு­ற­வுக்கு சிறந்­த­தோர் எடுத்­துக்­காட்­டாக இதைக்­கூ­ற­விட முடி­யும்.

பழி­வாங்­கும் மனோ­பா­வம் ஆபத்­தா­னது என்­பதை மகிந்த புரிந்­து­கொள்ள வேண்­டும்!
ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமி­ழர்­க­ளுக்கு எதை­யா­வது வழங்­கு­வ­தற்கு முற்­ப­டும்­போது, மகிந்த தரப்­பி­னர் அதற்கு முட்­டுக்­கட்டை இடு­வார்­க­ளென்­பதை உறு­தி­யா­கக் கூறி­விட முடி­யும். ஆனால் தமி­ழர் தரப்­பின் ஆத­ரவு கிடைக்­காது விட்­டால் தேர்­தல்­க­ளில், குறிப்­பாக அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை இவர்­கள் மறந்து போயுள்­ளமை குறித்து நோக்­கப்­பட வேண்­டிய விட­யம்.

இந்­த­நி­லை­யில் மகிந்த தரப்­பி­னர் கூட்­ட­மைப்பை பழி­வாங்க நினைப்­ப­தும், அதற்­கான நட­வ­டிக்­கை­ளில் ஈடு­ப­டு­வ­தும் இனங்­க­ளுக்­கி­டை­யில் முறு­கல் நிலையை ஏற்­ப­டுத்­தி­வி­டும். இத­னால் தமி­ழர்­க­ளின் ஆத­ரவை அந்த அணி­யி­னர் நிரந்­த­ர­மா­கவே இழந்து போகும் நிலை உரு­வா­கும்.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்­கள் தொடர்­பில் இவர்­கள் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். சில­வேளை கூட்­ட­மைப்பு கேட்­ட­வற்றை வழங்­கு­வ­தற்கு மகிந்த சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தால் சம்­பந்­த­னின் ஆத­ரவை அவர் பெற்­றி­ருக்க முடி­யும். தலைமை அமைச்­சர் பத­வி­யி­லும் நீடித்­தி­ருக்க முடி­யும். ஆனால் இன­வா­தி­க­ளு­டன் உறவை வைத்­துக்­கொண்டு தமி­ழர்­க­ளுக்கு எதை­யுமே வழங்­கு­வ­தற்கு மகிந்த தயா­ராக இல்­லா­த­தால் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வைப் பெற­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

ஆகவே, கூட்­ட­மைப்­பைப் பழி­வாங்­கும் எண்­ண­வோட்­டத்தை மகிந்த தரப்­பி­னர் உட­ன­டி­யா­கவே மாற்­றிக் கொள்ள வேண்­டும். இதுவே மகிந்­த­வின் அரசியல் எதிர்­கா­லத்­துக்கு அர­ணாக அமை­யும்.

You might also like