பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்!!

0 30

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் பார்வையற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவர் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பார்வைத் திறன் குறைவாக உள்ளவர் என்றாலும், தனது குரல்வளம், திறமையின் மூலம் புகழ்பெற்றவர்.

`சொப்பன சுந்தரி’, `என்னமோ ஏதோ’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகவுள்ளது.

இதில், சமீபத்தில் மீன் விற்றதன் மூலம் ட்ரெண்டான மாணவி ஹனான் நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞருமான அனூப் என்பவருக்கும் நேற்று எளிமையாக அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் 22- ஆம் திகதி சொந்த ஊரான வைக்கமில் உள்ள மகாதேவ் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது.

You might also like